முறுக்கு

முறுக்கு
முறுக்கு
தொடங்கிய இடம்இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிற தமிழர் வாழ் பகுதிகள்
பகுதிகுஜராத், மகாராட்டிரம், கருநாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கோவா
முக்கிய சேர்பொருட்கள்உழுந்து, அரிசி

முறுக்கு என்பது உளுந்து மாவு, அரிசிமாவு, கலந்து உருவாக்கப்படும் ஒரு பலகாரம் ஆகும்.

காரணப்பெயர்

முறுக்கிய நிலையில் அச்சு மூலம் பிழியப்படுவதால் முறுக்கு எனப்படுகிறது.

செயல் முறை

இந்த மாவுடன் எள், ஓமம், நெய் அல்லது டால்டா அல்லது தேங்காய்ப் பால் போன்றவை கலந்து சிறிது கெட்டியாகப் பிசைந்து முறுக்குக்கான அச்சில் இட்டு பிழிந்து எடுக்கின்றனர். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சுட வைத்து அந்த எண்ணெயில் பிழிந்து வைத்த முறுக்கைப் பொரித்து எடுப்பர். இது தமிழர்களின் உணவுப் பொருட்களில் விரும்பி உண்ணப்படும் முதன்மைச் சிற்றுண்டிகளுள் ஒன்றாகும்.[1]

பெயர் பெற்ற ஊர்

மணப்பாறையில் தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்யும் அரிசி முறுக்கு பெயர் பெற்றது.

வகைகள்

  • அச்சு முறுக்கு
  • கை முறுக்கு
  • தேன்குழல் முறுக்கு
  • தேங்காய்ப்பால் முறுக்கு
  • நெய் முறுக்கு
  • ஜவ்வரிசி முறுக்கு
  • பூண்டு முறுக்கு
  • கார முறுக்கு

பரவல்

முறுக்கு பிற தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தியா தவிர இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் பரவலாக வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது.

சான்றுகள்

  1. "செய்முறை". Archived from the original on 2015-09-05. Retrieved ஆகத்து 22, 2015.

2 முறுக்கு செய்முறை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya