மோகனூர், கந்தர்வக்கோட்டை
மோகனூர் (Mohanur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது பெரிய கோட்டை ஊராட்சியின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான புதுக்கோட்டைக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், கந்தர்வக்கோட்டையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 357 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] பெயராய்வுஇந்த ஊர் வேளாண்மைக்குப் பேர்பெற்ற ஊராக இருந்தது. நெல் செழித்து வளர்வதற்கு ஏற்ற வண்டல் மண் கொண்ட நிலப்பகுதியாகும். இந்த ஊர் ஒரு காலத்தில் நெல் கதிரடிக்கும் களமாக இருந்ததால் இந்த ஊர் முகவை ஊர் (நெல் கதிரடிக்கும் களத்திற்கு முகவை என்ற பெயர் உண்டு) என்று அழைக்கப்பட்டு, பின்னர் அது முகவைனூர் என்று ஆகி இறுதியில் மோகனூர் என்று மருவியது என்று அண்டனூர் சுரா குறிப்பிடுகிறார்.[2] பிறப்புகள்மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia