லீல் முற்றுகை (1940)
லீல் முற்றுகை (Siege of Lille) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகைச் சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 28 - ஜூன் 1, 1940ல் நடந்த இச்சண்டையில் பிரான்சின் முதலாம் ஆர்மி, நேச நாட்டுப் படைகளை இங்கிலாந்துக்குத் தப்பவிடாமல் அழிக்க விரைந்து கொண்டிருந்த நாசி ஜெர்மனியின் படைப்பிரிவுகளைத் தாமதப்படுத்தியது. இச்சண்டை லீல் நகருக்கு அருகில் நடைபெற்றது. மே 10ஆம் தேதி ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீதான தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானியத் திட்டப்படி இருபது நாட்களுக்குள் நேசநாட்டுப் படைகளின் பெரும் பகுதி பெல்ஜியத்திலும், பிரான்சின் வடபகுதியிலும் சுற்றி வளைக்கப்பட்டன. அவைகளைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படைவளையம் மெல்ல இறுகத் தொடங்கியது. ஜெர்மானியாரிடம் சிக்காமல் தங்கள் படைகளை டன்கிர்க் துறைமுகத்திலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குத் தப்ப வைக்க நேசநாட்டுத் தளபதிகள் முயன்றனர். வேகமாக முன்னேறும் ஜெர்மானியப் படைகளை லீல் நகரருகே தாமதப்படுத்தத் திட்டமிட்டனர். இத்திட்டத்தின் படி நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட பிரான்சின் முதலாம் ஆர்மி, ஏழு ஜெர்மானிய டிவிஷன்களை மூன்று நாட்கள் சமாளித்தது. இதனால் ஜெர்மானிய முன்னேற்றம் தாமதப்படுத்தப்பட்டு, பல நேச நாட்டுப் படைப்பிரிவுகள் டன்கிர்க்கிலிருந்து தப்பின. மே 31 அன்று ஜெர்மானியர்கள் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து லீல் நகரைக் கைப்பற்றினர்.
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia