வங்காளதேசத் துடுப்பாட்ட அணி, 2019 நவம்பரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இரு தேர்வுப் போட்டிகள் மற்றும் மூன்று இ20ப போட்டிகளில் விளையாடுகிறது.[1][2] இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. இது தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு வங்காளதேசம் மேற்கொள்ளும் இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும். மேலும் இருபது20 தொடரில் இந்தியாவை எதிர்த்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.[3][4]
அணிகள்
இ20ப தொடர்
1வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஷிவம் தூபோ (இந்.) மற்றும் முகம்மது நைம் (வங்.) ஆகிய இரு வீரர்களும் தங்களது முதல் இ20ப போட்டியில் விளையாடினர்.
- ரோகித் சர்மா, தனது 99வது இ20ப போட்டியில் விளையாடினார். இதன்மூலம் இந்திய அணிக்காக அதிக இ20ப போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார்.[9]
- இதுவே இ20ப போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக வங்காளதேச அணி பெறும் முதல் வெற்றியாகும்.[10]
2வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரோகித் சர்மா, இந்திய அணிக்காக 100 இ20ப போட்டிகளில் விளையாடிய முதல் ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[11]
3வது இ20ப
- யுவேந்திர சகல் இந்திய அணிக்காக இ20ப போட்டிகளில் 50 மட்டையாளர்களை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆனார்.[12]
- தீபக் சாஹர் (இந்.) இ20ப வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கையைப் பதிவு செய்தார்.[13]
- தீபக் சாஹர் (இந்.) இ20ப போட்டிகளில் இந்திய அணிக்காக மும்முறை வீழ்த்திய முதல் வீரரானார். மேலும் தனது இ20ப போட்டிகளில் முதன்முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[14][15]
தேர்வுத் தொடர்
1வது தேர்வு
|
எ
|
|
|
|
493/6 அ (114 நிறைவுகள்) மாயங் அகர்வால் 243 (330) அபு ஜயத் 4/108 (25 நிறைவுகள்)
|
|
|
|
- நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- மோமினல் ஹாக் தேர்வுப் போட்டிகளில் முதன்முறையாக வங்காளதேச அணித்தலைவராக விளையாடினார்.[16]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0.
2வது தேர்வு
|
எ
|
|
106 (30.3 நிறைவுகள்) ஷத்மன் இஸ்லாம் 29 (52) இஷாந்த் ஷர்மா 5/22 (12 நிறைவுகள்)
|
|
|
|
|
|
- நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- இது இந்தியா, வங்களாதேசம் ஆகிய இரு அணிகளுக்கும் முதல் பகல்/இரவு தேர்வுப் போட்டியாகும். மேலும் இது இந்தியாவில் நடைபெற்ற முதல் பகல்/இரவுத் தேர்வுப் போட்டியாகும்.[17]
- ரித்திமான் சாஃகா இந்திய அணிக்காக 100 வீழ்த்தல்களை நிகழ்த்திய 5வது இழப்புக் கவனிப்பாளர் ஆனார்.[18]
- மெஹதி ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகிய இருவரும் லிதன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்களாக வங்காளதேச அணியில் விளையாடினர்.[19][20]
- ஒரே தேர்வுப் போட்டியில் இரு மாற்று வீரர்கள் விளையாடியது இதுவே முதன்முறையாகும்.[21]
- இஷாந்த் ஷர்மா (இந்.) தனது தேர்வுப் போட்டிகளில் 10வது முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[22]
- விராட் கோலி (இந்.) மொத்த ஆட்டப்பகுதிகளின் (86) அடிப்படையில் அதிவேகமாக 5,000 ஓட்டங்களைக் கடந்த அணித்தலைவர் ஆனார்.[23]
- விராட் கோலி பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் தனது 70வது நூறைப் பதிவு செய்தார்.[24] இது தேர்வுப் போட்டிகளில் அணித்தலைவராக இவர் பெறும் 20வது நூறாகும்.[25] மேலும் பன்னாட்டுப் போட்டிகளில் அணித்தலைவராக அதிக நூறுகள் அடித்தவர் என்ற ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் (41).[26]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0.
மேற்கோள்கள்