அக்மத் அசன் தானி
அக்மத் அசன் தானி ( Ahmad Hasan Dani) (20 ஜூன் 1920 – 26 ஜனவரி 2009) ஒரு பாக்கித்தானிய தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றாசிரியரும் மற்றும் மொழியியலாளரும் ஆவார். நடு ஆசிய மற்றும் தெற்கு ஆசிய தொல்லியல் மற்றும் வரலாற்றில் இவர் முதன்மையானவர்களில் இவரும் ஒருவர்.[1][2] இவர், பாக்கித்தான் மற்றும் வங்காளதேசத்தில் உயர்கல்வியில் தொல்லியல் துறையை ஒரு துறையாக அறிமுகப்படுத்தினார்.[3] தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துவதைத் தவிர, தனி தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு கல்வி நிலைகளையும் சர்வதேச கூட்டுறவுகளையும் வகித்தார். இவர் குறிப்பாக சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய மற்றும் வடக்கு பாக்கித்தானில் உள்ள காந்தாரம் இடங்கள் பற்றிய தொல்லியல் பணிகளுக்காக அறியப்படுகிறார். ஆராய்ச்சிப் பணிகள்தானி சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய வடக்கு பாக்கித்தானில் உள்ள இரெக்மான் தேரியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டார்.[4] பெசாவர் மற்றும் சுவாத் பள்ளத்தாக்குகளில் உள்ள காந்தாரத் தளங்களின் பல கண்டுபிடிப்புகளையும் இவர் செய்தார். மேலும் கீழ் தீரில் இந்தோ-கிரேக்க தளங்களிலும் பணியாற்றினார்.[5] 1985 ஆம் ஆண்டு முதல், இவர் ஐடல்பர்க் பல்கலைக்கழகத்தின் அரால்ட் ஆப்டமன் என்பவருடன் இணைந்து வடக்கு பாக்கித்தானின் உயரமான மலைப் பகுதியில் உள்ள புதிய கற்காலத்தின் பழங்கால எச்சங்கள் பற்றிய பாறை செதுக்கல்கள் மற்றும் கல்வெட்டுகளின் ஆவணங்களை மையமாகக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.[6] சீனாவில் பட்டுப் பாதையின் பாலைவனப் பாதைப் பயணம் (1990) மற்றும் சோவியத் ஒன்றியத்தில் (1991) பட்டுப் பாதையின் ஸ்டெப்பி பாதைப் பயணத்திற்கான யுனெஸ்கோ குழுக்களுக்கும் இவர் தலைமை தாங்கினார். தானி தனது விரிவான களப்பணி மற்றும் ஆராய்ச்சி அனுபவத்திலிருந்து, சிந்து சமவெளி நாகரிகத்தில் தென்னிந்தியக் கலாச்சாரத்தின் எந்த தாக்கத்தையும் மறுத்தார்.[4] சிந்துப் படுகை மற்றும் சுற்றியுள்ள உள்நாட்டின் சமூக-அரசியல் அமைப்புகள் மற்றும் கலாச்சார விநியோகத்தின் புவியியல் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி, சிந்து சமவெளி கலாச்சாரத்தின் வளர்ச்சியில் சிந்து-கங்கைச் சமவெளி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிவித்தார்.[7] வெண்கல காலத்தின் போது கடலோரப் பகுதியில் இருந்து எந்தப் படையெடுப்பும் ஏற்படவில்லை, இருப்பினும் கடற்கரை கடல் வணிகத்தை எளிதாக்கியது. தானியின் கூற்றுப்படி, முக்கியத் தாக்கம் மேற்கில் நடு ஆசியாவிலிருந்து வந்தது. வெளிப்புறக் கண்ணுக்கு ஒரு எல்லையாகத் தோன்றும் மலைப்பாங்கான மேற்கு எல்லைப்பகுதி உண்மையில் மலை பீடபூமிகளின் வலையமைப்பாகும், அங்கு உள்ளூர் மக்கள் எப்போதும் சுதந்திரமாக நகர்ந்தனர். எனவே, பாக்கித்தானின் கலாச்சார வரலாறு பௌத்த, பாரசீக மற்றும் பிற்கால சூபித்துவ தாக்கங்கள் மூலம் மத்திய ஆசியாவுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது என்று இவர் வாதிட்டார். மெசொப்பொத்தேமியா மற்றும் பண்டைய எகிப்துடன் வர்த்தக உறவுகளை நிறுவ மெலுக்கான்களை அரபிக் கடல் அனுமதித்த போதிலும், பெரும்பாலான வரலாற்று இயக்கங்கள் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கு இடையே நிகழ்ந்ததாக தானி கூறினார். இரு பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பாக புவியியல் இருப்பிடம் "பாக்கித்தான் மக்களுக்கும் நடு ஆசியாவிலுள்ள மக்களுக்கும் கலாச்சாரம், மொழி, இலக்கியம், உணவு, உடை, மரச்சாமான்கள் மற்றும் நாட்டுப்புறவியல் துறையில்" உள்ள உறவை வகைப்படுத்துகிறது.[8] வெளியீடுகள்அக்மத் அசன் தானி 30 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஏராளமான பத்திரிகை கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் 35 மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் அறிந்தவர். மேலும் வங்காள மொழி, பிரஞ்சு, இந்தி, காசுமீரி, மராத்தி, பஷ்தூ மொழி, பாரசீக மொழி, பஞ்சாபி, சமஸ்கிருதம், சராய்கி மொழி, சிந்தி, தமிழ், துருக்கியம் மற்றும் உருது மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.[9][10] இந்த மொழிகளில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். இறப்புநீரிழிவு நோய் காரணமாக 22 ஜனவரி 2009 அன்று, இஸ்லாமாபாத்திலுள்ள பாக்கித்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இவர் 26 ஜனவரி 2009 அன்று தனது 88 வயதில் இறந்தார்.[11] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia