இரசவாதம் செய்த படலம்பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் முப்பத்தாறாவது படலமாக இரசவாதஞ் செய்த படலம் (செய்யுள் பத்திகள்: 1856 -1885) உள்ளது[1]. இதில் திருப்பூவணத்து இறைவன் திருமேனியைச் செய்திடத் தேவையான தங்கத்தை இரசவாதம் மூலமாகப் பெற்றிடும் முறையை மதுரை ஈசன் சித்தர் வடிவில் நேரில் வந்து அருளியுள்ளார். அன்னமிட்ட கைமுன்பு, திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.
அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள். சித்தர் வடிவில் சிவபெருமான்இந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார். அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார். இரசவாதம்பின்னர். அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள், இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானதுகிடைத்த தங்கத்தைக் கொண்டு வடிவே இல்லாத இறைவனின் திருவுருவத்தைச் செய்திட்டார், இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு அச்சோ! அழகிய பிரனோ இவன்!! என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள், அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது, இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம், பொன்னனையாள் இறைவனின் கன்னத்தைக் கிள்ளுவது போன்ற சிற்பம் கோயில்; மகா மண்டபத்தில் உள்ள கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது,
திருப்பூவணம் கோயில் இறைவனின் திருமேனியைச் செய்திட மதுரை ஈசனே நேரில் சித்தர் வடிவில் வந்து. இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்தது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும், இறைவனது திருவுள்ளத்தில். அடியவர்களில் அடிமையென்றும் ஆடிப்பிழைப்பவர் என்றும் பேதங்கள் ஏதும் இருப்பதில்லை, இறைவன் மனம் விரும்புவதெல்லாம் அன்பும். தொண்டும் பக்தியும் தான் என்பதை அறியுமாறு கூறப்பட்டுள்ளது, மேலும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதால் நமது பாவங்கள் அனைத்தும் ஒழிந்து நமக்கு இறைவன் நேரில் காட்சி தந்து அருளுவான் என்பதும் கூறப்பட்டுள்ளது, பொன்னனையாள் தங்கத்தினால் ஆன இறைவனது திருவடிவத்தைப் பிரதிட்டை செய்து தேர்த்திருவிழா முதலியன நடத்தி இனிது வாழ்ந்தாள், சிலகாலம் சென்ற பின்னர் வீடுபேறு அடைந்தாள், மதுரையில் திருவிளையாடற் புராணக்கதைத் தொடர்பான விழாக்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன, அவ்வாறாக நடைபெறும்போது இரசவாதம் செய்த படலம் நடைபெறும் நாளில் சோமசுந்தரக் கடவுள் மதுரையிலிருந்து திருப்பூவணத்திற்கு எழுந்தருளி வந்தார், பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு திருப்பூவணம் வந்த சோமசுந்தரக் கடவுளைக் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் மதுரை ஆலயத்திற்குக் கொண்டு சேர்ப்பது முடியாததாகிவிட்டது, இக்காரணத்தினால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் இத்திருவிளையாடற் தொடர்பான விழாவினை மதுரைக் கோயிலிலேயே வைத்து நடத்தி வருகின்றனர், இப்போது வாகன வசதிகளும். நவீன தொலைத்தொடர்பு வசதிகளும் கூடியுள்ளதால் முன்புபோல் இப்போது காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை, எனவே இரசவாதம் செய்த படலம் தொடர்பான திருவிழாவினை மீண்டும் திருப்பூவணத்தில் நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. 36-ஆவது திருவிளையாடற் பாடல்கள்
திருப்பூவணத் தலத்தின் பெருமை1856 வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர் பொன்னனையாளின் தன்மை1859 கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயில் சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு வருதல்1866 துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட சித்தமூர்த்தி பொன்னனையாளை மெலிந்த காரணம் யாதெனல்1870 நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பாp னடந்து சித்த மூர்த்திகள் சிவனடியார் பெருமை கூறல்1875 அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத் சித்தமூர்த்திகள் இரசவாதம் புரிதல்1879 வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த பொன்னனையாள் உலோகங்களைத் தீயிலிட்டுப் பொன்னாதல்1882 மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில் இரசவாதம் செய்த படலம் முற்றிற்று, திருவிளையாடற் புராணம். கழுவேறிய திருவிளையாடல்வேசமுற விருந்த கழு திரைமுடிந்த வடமின்றும் பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன்னகர் மருங்கிற் காசின் மேல் விளங்கியது கழுவர் படைவீடெனவே - செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி. திருவாலவாயுடையார் - பாடல் எண்,50 திருவிளையாடற் பயகரமாலைஇரசவாதம் செய்த திருவிளையாடற் புராண வரலாறு. திருவிளையாடற்பயகர மாலையில்.
(திருவிளையாடற் பயகரமாலை. பாடல் எண் 45) என்று பாடப்பெற்றுள்ளது, கடம்பவன புராணம்பொன்னனையாளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் கடம்பவன புராணத்திலும்
(கடம்பவன புராணம். இரவாதஞ் செய்த படலம். பாடல் எண் - 39 ) என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக திருப்பூவணத் தலபுராணம். திருவிளையாடற் புராணம். திருவிளையாடற் பயகரமாலை. கடம்பவன புராணம். பெரியபுராணம் ஆகிய புராணங்களில் திருப்பூவணத்திருத் தலத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. ஆதாரங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia