மெய்க் காட்டிட்ட படலம்
மெய்க் காட்டிட்ட படலம் என்பது சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தில் வரும் 30ஆம் படலம் ஆகும், இது கூடல் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது இதில் 1664 முதல் 1704 வரை பாடல்கள் இடம்பெற்றுள்ளன [1] கதைசேதிராயர் என்ற குறுநில மன்னன் பாண்டிய நாட்டோடு சேர்த்து பல நாடுகளை கைப்பற்றும் எண்ணம் கொண்டிருந்தான், இச்செய்தியை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்துக் கொண்ட குலபூஷண பாண்டியன் தன் படைத்தலைவன் சௌந்தர சாமந்தனிடம் இச்செய்தியை கூறி பெரும்படையை திரட்டும்படியும் அதற்கு ஆகும் செலவை கருவூலத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படியும் கூறினான் [2] சௌந்தர சாமந்தன் இறைப்பணி செய்தல்படைத் திரட்ட பெற்ற பெரும் பொருளை அதற்கு செலவிட மனமில்லாது சிவனடியார்களுக்கு உதவுதல் கோவில் திருப்பணிகள் செய்தல் ஆகியவற்றிக்கு செலவிட்டார் [2] மன்னன் படையைக் காண கேட்டலும் படைகளின் வருகையும்ஒரு நாள், செளந்தர சாமந்தன் திரட்டிய படைகளை காண விரும்பிய மன்னன் நாளை, திரட்டிய படைகளை அணிவகுக்கும்படி கூறி சென்றார் இது பற்றி சொக்கநாதரிடம் முறையிட்டான் சாமந்தன், கவலை வேண்டாம் நாளை நாம் படைத் திரட்டி வருகிறோம் என்று அசரிரீயாக கூறி அருளினார் இறைவன், மறுநாள் படையைக் காண மன்னனை வரச் சொல்லி விட்டு திடலுக்கு வந்திருந்தான் சௌந்தர சாமந்தன், இதை காண பொதுமக்களும் வந்திருந்தனர், பிறகு மன்னன் கூறியதும் செக்கநாதரை தியானித்தான் உடனே மதுரை நகர் குலுங்கும்படி பேரொலியுடன் படைகள் அணிவகுத்தன கலிங்கம் வங்கம் போன்ற பல்வேறு நாடுகளின் வீரர்களும் படைகளும் வந்திருந்தன நடுவில் இறைவன் குதிரையில் வந்தபடி படைகளை வழிநடத்தி வந்தார், இதைக் கண்ட மன்னன் சாமந்தனுக்கும் இறைவனுக்கும் பெரும் பொருள் தந்து மகிழ்ந்தார் இதற்கிடையில் காட்டிக்கு வேட்டைக்கு சென்ற சேதிராயர் புலித் தாக்கி இறந்த செய்தியை ஒற்றர் மூலம் அறிந்தார், எனவே படையை வழிநடத்தி வந்த இறைவனிடம் படைகளின் தேவை தற்போது இல்லை என்றும் பின்னர் அழைப்பதாகவும் கூறி பாசறைக்கு திரும்பும்படி கூறினார், மன்னன் கூறிய உடனே படைகள் மறைந்தன இதைக் கண்டு வியந்த மன்னனிடம் நடந்தவற்றை கூறினான் சாமந்தன், இதனால் மகிழ்ந்த மன்னன் சாமந்தனனுக்கு இறைப்பணி செய்ய பெரும் பொருள் தந்து மகிழ்ந்தான் [2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia