பொட்டாசியம் புளோரைடு
பொட்டாசியம் புளோரைடு (Potassium fluoride) என்பது KF என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு பயன்பாடுகளுக்காகவும் , வேதியியலுக்காகவும் புளோரைடு அயனிகளை வழங்கக்கூடிய மூலச் சேர்மங்களில் ஐதரசன் புளோரைடுக்கு அடுத்ததாக நிற்பது பொட்டாசியம் புளோரைடு ஆகும். கார ஆலைடான இச்சேர்மம் இயற்கையில் அரிய கனிமமாக விளங்கும் கார்பபைட் வடிவில் கிடைக்கிறது. பொட்டாசியம் புளோரைடு கரைசல்கள் கரையக்கூடிய புளோரோ சிலிக்கேட்டுகளை உருவாக்கும் என்பதால் அவை கண்ணாடியை அரிக்கும் தன்மை கொண்டுள்ளன. ஐதரசன் புளோரைடு பொட்டாசியம் புளோரைடை விட வினைத்திறன் மிக்கது ஆகும். தயாரிப்புபொட்டாசியம் கார்பனேட்டை அதிக அளவு ஐதரோ புளோரிக் அமிலத்தில் கரைத்தால் பொட்டாசியம் இருபுளோரைடு கரைசல் கிடைக்கிறது. இக்கரைசலை ஆவியாக்கினால் பொட்டாசியம் இருபுளோரைடு படிகங்கள் தோன்றுகின்றன. இப்படிகங்களை சூடாக்குவதால் பொட்டாசியம் புளோரைடு உருவாகிறது.
இவ்வுப்பைத் தயாரிக்க கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது. ஐதரசன் புளோரைடு தயாரிப்பது போல வெப்பம் தாங்கும் நெகிழிகள் அல்லது பிளாட்டினம் கலன்கள் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொட்டாசியம் புளோரைடு கண்ணாடி பீங்கான் முதலியவற்றை அரிக்கும் தன்மை கொண்டது ஆகும். பயன்கள்கரிம வேதியியலில், குளோரோகார்பன்களை புளோரோகார்பன்களாக மாற்றும் வினைகளில் பொட்டாசியம் புளோரைடு பயன்படுகிறது. இவ்வினை பிங்கெல்சிடெய்ன் வினை[2] எனப்படுகிறது. இவ்வகை வினைகளில் பொதுவாக இருமெத்தில் பார்மமைடு, எத்திலீன் கிளைக்கால் மற்றும் இருமெத்தில் சல்பாக்சைடு போன்ற முனைவுக் கரைப்பான்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்[3]. முன்பாதுகாப்புபுளோரைடு அயனிகளை வழங்கும் மற்ற மூலங்கள் போலவே பொட்டாசியம் புளோரைடும் நச்சுத் தன்மை வாய்ந்ததாகும். மனிதர்களுக்கான இதனுடைய கொல்லும் அளவு குறைவாக இருந்தாலும் இது நச்சுப்பொருளாகவே கருதப்படுகிறது. இதை உட்கொள்வதும் சுவாசிப்பதும் மிகுந்த தீங்கு விளைவிக்கும் செயல்களாகும். தோலின்மீது பட நேர்ந்தால் கடுமையான தீப்புண்களை உருவாக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia