இலந்தனம்(III) தெலூரைடு
இலந்தனம்(III) தெலூரைடு (Lanthanum(III) telluride) என்பது La2Te3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், மற்றும் தெலூரியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இலந்தனம் தனிமத்தின் அறியப்பட்ட தெலூரைடுகளில் இதுவும் ஒன்றாகும். தயாரிப்புஇலந்தன்ம், தெலூரியம், சோடியம் கார்பனேட்டு ஆகியவற்றின் கலவையை 400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து இலந்தனம்(III) தெலூரைடு உருவாகும்.[1] இலந்தனம்(III) குளோரைடு மற்றும் தெலூரியத்தை மூலப்பொருளாகப் பயன்படுத்தியும் இலந்தனம்(III) தெலூரைடு தயாரிக்க முடியும். இவ்வினையில், தெலூரியம் முதலில் +4 ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் ஐதரசீன் நீரேற்று −2 ஆக்சிசனேற்ற நிலைக்கு குறைக்கப்படுகிறது.[2] La2Te3-Cu2Te அமைப்பில் CuLaTe2 மற்றும் Cu4La2Te5 போன்ற பல்வேறு கட்டங்களும் உருவாக்கப்படலாம்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia