செருமேனியம் தெலூரைடு (Germanium telluride) என்பது GeTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியமும் , தெலூரியமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சால்கோசெனைடு கண்ணாடியின் பகுதிப்பொருளாக உள்ளது. பகுதி உலோக கடத்துகையையும் அயமின் பண்பையும் செருமேனியம் தெலூரைடு வெளிப்படுத்துகிறது[ 2]
செருமேனியம் தெலூரைடு மூன்று வகையான படிக வடிவங்களில் காணப்படுகிறது. அறை வெப்பநிலையில் α (சாய்சதுரம்) மற்றும் γ (செஞ்சாய்சதுரம்) அமைப்புகளிலும் உயர் வெப்பநிலைகளில் β ( கனசதுர, பாறை உப்பு – வகை) அமைப்பிலும் காணப்படுகிறது. குறிப்பாக β அமைப்பு பெரும்பாலும் தூய செருமேனியம் தெலூரைடு அயமின் கியூரி வெப்பநிலை தோராயமாக 670 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும்போது காணப்படுகிறது[ 3] [ 4]
கலப்பிடப்பட்ட செருமேனியம் தெலூரைடு குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்துத்திறன் சேர்மமாக இருக்கிறது.[ 5]
மேற்கோள்கள்
↑ R. Tsu (1968). "Optical and Electrical Properties and Band Structure of GeTe and SnTe". Phys. Rev. 172 (3): 779–788. doi :10.1103/PhysRev.172.779 . Bibcode: 1968PhRv..172..779T .
↑ A. I. Lebedev, I. A. Sluchinskaya, V. N. Demin and I. H. Munro (1997). "Influence of Se, Pb and Mn impurities on the ferroelectric phase transition in GeTe studied by EXAFS" . Phase Transitions 60 : 67. doi :10.1080/01411599708220051 . http://semiconductors.phys.msu.su/publ/phtr.html . பார்த்த நாள்: 2015-09-12 .
↑ E. I. Givargizov, A.M. Mel'nikova (2002). Growth of Crystals . Birkhäuser. p. 12. ISBN 0-306-18121-5 .
↑ Pawley, G.; Cochran, W.; Cowley, R.; Dolling, G. (1966). "Diatomic Ferroelectrics" . Physical Review Letters 17 (14): 753. doi :10.1103/PhysRevLett.17.753 . Bibcode: 1966PhRvL..17..753P . https://archive.org/details/sim_physical-review-letters_1966-10-03_17_14/page/n16 .
↑ Hein, R.; Gibson, J.; Mazelsky, R.; Miller, R.; Hulm, J. (1964). "Superconductivity in Germanium Telluride" . Physical Review Letters 12 (12): 320. doi :10.1103/PhysRevLett.12.320 . Bibcode: 1964PhRvL..12..320H . https://archive.org/details/sim_physical-review-letters_1964-03-23_12_12/page/n5 .
செருமேனியம் (II) செருமேனியம் (IV)