ஈரோடு தமிழன்பன் (Erode Tamilanban) ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.
சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர்.[1][2]தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும்,[3] தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் [4] பணியாற்றி உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊரில் வாழ்ந்த செ.இரா.நடராசன்-
வள்ளியம்மாள் இணையரின் மகனாக 1933 செப்டம்பர் 28 அன்று பிறந்தார்.[5] இவரது இயற்பெயர் ந.செகதீசன்.