எஸ். ஆர். பிரபாகரன்
எஸ். ஆர். பிரபாகரன் (S. R. Prabhakaran) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தினை இயக்கியதன் மூலமாக அறியப்படுகிறார்.[1] தொழில்2012 இல் சுந்தர பாண்டியன் திரைப்படத்தினை இயக்குநர் சசிக்குமாரை நாயகனாக வைத்து இயக்கினார்.[2] அப்படத்தில் லட்சுமி மேனன், சௌந்தரராஜா, விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[3] 14 செப்டம்பர் 2012 இல் வெளிவந்த அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது..[4] கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[5] குடும்பம்பிரபாகரன் தமிழ்நாடு மாநிலம் மதுரையில் 14 ஜூலை 1975ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கே. பி. சூலி ராமு மற்றும் எஸ். இராஜலட்சுமி ஆவார். இவர் அறிவியல் திரைப்படத்தில் பட்டையப் படிப்பு முடித்துள்ளார். திவ்யா என்பவரை 14 ஜூலை 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசால் என்ற மகன் உள்ளார்.[6] திரைப்படங்கள்
விருதுகள் வென்றது மற்றும் பரிந்துரைக்கப்பட்டது
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia