ஓசுமியம்(II) குளோரைடு
ஓசுமியம்(II) குளோரைடு (Osmium(II) chloride) என்பது OsCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்புஓசுமியம்(III) குளோரைடு சேர்மத்தை வெற்றிடத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் விகிதச்சம்நிலைமாற்றம் நிகழ்ந்து . ஓசுமியம்(II) குளோரைடு உருவாகும்.[2]
இயற்பியல் பண்புகள்ஓசுமியம்(II) குளோரைடு நீரில் கரையாத ஒரு நீருறிஞ்சும் அடர் பழுப்பு நிற திண்மப் பொருளாகும்.[3] எத்தனால் மற்றும் ஈதர் ஆகிய கரைப்பான்களில் ஓசுமியம்(II) குளோரைடு கரையும்.[4] வேதிப் பண்புகள்ஓசுமியம்(II) குளோரைடு கந்தக அமிலம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகிய அமிலங்களுடன் வினை புரியாது. 220 பாகை செல்சியசு வெப்பநிலையில் கார்பன் மோனாக்சைடுடன் வினைபுரிகிறது.
பயன்கள்வினையூக்க வினைகளின் மூலம் மூவல்கைலமீன்கள் தயாரிப்பில் ஓசுமியம்(III) குளோரைடு பயன்படுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia