ஓசுமியம்(III) குளோரைடு
ஓசுமியம்(III) குளோரைடு (Osmium(III) chloride) என்பது OsCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்புஓசுமியம் தனிமத்துடன் குளோரினைச் சேர்த்து வினைபுரிட்யச் செய்தால் ஓசுமியம்(III) குளோரைடு' உருவாகும்.
ஓசுமியம் நாற்குளோரைடு சேர்மத்தை சூடுபடுத்தினாலும் ஓசுமியம்(III) குளோரைடு' உருவாகும்.:
இயற்பியல் பண்புகள்![]() ஓசுமியம்(III) குளோரைடு கருப்பு-பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[1] நீரை உறிஞ்சி OsCl3·3H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு நீரேற்றாக ஓசுமியம்(III) குளோரைடு அடர் பச்சை நிறப் படிகமாக மாறுகிறது.[2] பயன்கள்ஓசுமியம்(III) குளோரைடு நீரேற்றானது இருகுளோரோயீரைதரினோ ஓசுமியம் என்ற் அணைவுச்சேர்மம் மற்றும் பிற ஓசுமியம் சேர்மங்களின் உற்பத்திக்கு ஒரு முன்னோடி வேதிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது.[3] பல்வேறு அரீன் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கும் இது ஒரு முன்னோடிச் சேர்மமாகும்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia