ஓசுமியம் நாற்குளோரைடு
ஓசுமியம் நாற்குளோரைடு (Osmium(IV) chloride or osmium tetrachloride) என்பது OsCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இரண்டு பல்லுருவ படிக அமைப்புகளில் காணப்படுகிறது. மற்ற ஓசுமியம் அணைவுச்சேர்மங்களைத் தயாரிக்கவும் இச்சேர்மம் உதவுகிறது. தயாரிப்பு, அமைப்பு, வினைகள்1909 ஆம் ஆண்டில் முதன்முதலாக இச்சேர்மம் ஓசுமியம் உலோகத்தைக் குளோரினேற்றம் செய்து தயாரிக்கப்பட்டது[1]. இவ்வகை தயாரிப்பு முறையில் உயர் வெப்பநிலை பல்லுருவ அமைப்புச் சேர்மம் தோன்றுகிறது:[2]
கருஞ்சிவப்புப் பல்லுருவ அமைப்புச் சேர்மமானது நேர் சாய்சதுர படிகவமைப்பும், எண்முக ஒருங்கிணைப்பு கொண்ட ஓசுமியம் மையங்கள் OsCl6 எண்முகத்தின் எதிர் விளிம்புகளுடன் பகிர்ந்து கொள்கின்ற அமைப்பையும் ஏற்று சங்கிலியாக உருவாகின்றன[3]. ஓசுமியம் நான்காக்சைடுடன் தையோனைல் குளோரைடு சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பழுப்புநிற கனசதுர பல்லுருவ அமைப்பு சேர்மம் தோன்றுகிறது:[4]
ஓசுமியம் நான்காக்சைடு, ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து அறுகுளோரோ ஓசுமேட்டு எதிர்மின் அயனியைக் கொடுக்கிறது. OsO4 + 8 HCl → H2OsCl6 + Cl2 + 4 H2O
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia