ஓசுமியம் டெட்ராபுரோமைடு
ஓசுமியம் டெட்ராபுரோமைடு (Osmium tetrabromide) OsBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாக ஓசுமியம் டெட்ராபுரோமைடு காணப்படுகிறது. அழுத்தத்ஹின் கீழ் ஓசுமியம் நாற்குளோரைடுடன் புரோமினைச் சேர்த்து வினைபுரியச் செய்து ஓசுமியம் டெட்ராபுரோமைடு தயாரிக்கப்படுகிறது. கட்டமைப்புஓசுமியம் டெட்ராபுரோமைடு ஒரு கனிம வேதியியல் பலபடி என்று எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் தீர்மானிக்கின்றன. பிளாட்டினம் டெட்ராபுரோமைடு மற்றும் டெக்னீசியம் டெட்ராகுளோரைடு ஆகியவற்றுடன் இதன் கட்டமைப்பு ஒத்தவடிவம் கொண்டுள்ளது. எனவே, ஓசுமியம் எண்முக ஒருங்கிணைப்பில் உள்ளது எனலாம். ஒவ்வொரு ஓசுமிய மையமும் நான்கு இரட்டிப்பு பால புரோமைடு ஈந்தணைவிகள் மற்றும் இரண்டு ஒன்றிற்கொன்று பரிமாற்றம் செய்து கொள்ளும் சிசு விளிம்புநிலை புரோமைடு ஈந்தணைவிகளூடன் பிணைந்துள்ளன.[1] தொடர்புடைய சேர்மங்கள்ஓசுமியம்(III) புரோமைடு மட்டுமே படிகமாக்கப்பட்டுள்ள இதர இரும ஓசுமியம் புரோமைடு சேர்மமாகும்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia