கடற் காலமானி
கடற் காலமானி (Marine chronometer) என்பது, நேர நியமத்துக்காக கடற்பயணத்தின்போது பயன்படக்கூடிய அளவு துல்லியத்தன்மை கொண்ட மணிக்கூடு ஆகும். இது கப்பலின் அமைவிட நெடுங்கோட்டைக் கண்டறிவதற்குப் பயன்படுகிறது. மின்னணுவியல் சாதனங்களோ, தொலைத்தொடர்புக் கருவிகளோ இல்லாதிருந்த காலத்தில், தொலைதூரப் பயணங்களில் துல்லியமாக நேரத்தை அறியவேண்டிய தேவை இருந்ததால், 18 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டபோது இது ஒரு சாதனையாக இருந்தது. உண்மையான முதற் காலமானி யோன் அரிசன் என்பவரின் வாழ்நாள் உழைப்பின் பயனாக உருவானது. 31 ஆண்டுகள் விடா முயற்சியுடன் அவர் நடத்திய ஆய்வுகள் கடற்பயணங்களில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திக் கண்டுபிடிப்புக் காலத்தையும், குடியேற்றவாதத்தையும் விரைவுபடுத்தியது. காலமானி என்பது "குரோனோமீட்டர்" (chronometer) என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம். "குரோனோமீட்டர்" என்னும் சொல், கிரேக்கச் சொற்களான "குரோனோஸ்" (காலம்), "மீட்டர்" (எண்ணி) ஆகிய சொற்களைச் சேர்த்து செரெமி தக்கர் என்பவரால் 1714ல் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia