நானக்சாகி நாட்காட்டி![]() நானக்சாகி நாட்காட்டி (Nanakshahi calendar) என்பது, முக்கியமான சீக்கிய நிகழ்வுகளைக் தீர்மானிப்பதற்காக சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெப்பமண்டல சூரிய நாட்காட்டி ஆகும். பிரபல சீக்கிய அறிஞரான பேராசிரியர் கிர்பால் சிங் பதுங்கர் அக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது சீக்கியத் தலைவர்களின் முன்னிலையில் இந்த நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது.[1] 1998ல் இருந்து பயன்பாட்டில் உள்ள இந்த நாட்காட்டி, இதற்கு முன்னர் புழக்கத்தில் இருந்த இந்தியத் தேசிய நாட்காட்டிக்குப் பதிலாக நடைமுறைக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் பால் சிங் புரேவால் என்பவர் ஆவார். சீக்கியத்தின் முதல் குருவான குரு நானக் பிறந்த 1469ம் ஆண்டே இந்த நாட்காட்டியின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது. புத்தாண்டு கிரகோரிய நாட்காட்டியின்படி ஒவ்வோராண்டும் மார்ச் 14ம் தேதி வருகிறது.[1] இந்த நாட்காட்டி உலகெங்கிலும் உள்ள 90% குருத்துவாராக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சீக்கிய உலகின் சில பழமைவாதக் குழுக்களிடையே இதை ஏற்பது குறித்த சர்ச்சைகள் உள்ளன. குருமார்களின் காலத்திலிருந்தே இருந்து வருகின்ற தம்டமி தக்சால் போன்ற சில அமைப்புக்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கூறுபாடுகள்நானக்சாகி நாட்காட்டியின் சில முக்கியமான கூறுபாடுகள் வருமாறு:
மாதங்கள்நானக்சாகி நாட்காட்டியின் மாதங்கள் வருமாறு:[1][2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia