நாட்காட்டி ஆண்டு

நாட்காட்டி ஆண்டு (calendar year) என்பது எந்த ஒரு நாட்காட்டியின் புத்தாண்டு நாளில் துவங்கி, அடுத்த புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாளில் முடிவடைகிறது.[1]

பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டி ஆண்டு பன்னாட்டளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. கிரிகோரியன் ஆண்டு ஆங்கில மாதமான சனவரி 1ஆம் நாளில் துவங்கி, டிசம்பர் 31ஆம் நாளில் முடிவடைகிறது. கிரிகோரியன் நாட்காட்டிப் படி சாதாரண ஆண்டுகளில் 365 நாட்களும்,நெட்டாண்டுகளில் மட்டும் 366 நாட்களைக் கொண்டிருக்கும்.

காலாண்டு

நிதி மற்றும் நிர்வாக வசதிக்காக நாட்காட்டி ஆண்டை மூன்று மாதங்கள் கொண்ட நான்கு காலாண்டாக பிரித்துள்ளனர்.

  • முதல் காலாண்டு (Q1): சனவரி 1ஆம் நாள் முதல் மார்ச் 31ஆம் நாள் முடிய உள்ள 90 கொண்டது. (நெட்டாண்டுகளில் மட்டும் 91 நாட்கள்)
  • இரண்டாம் காலாண்டு, (Q2): 1 ஏப்ரல் முதல் 30 சூன் முடிய 91 நாட்கள்
  • மூன்றாம் காலாண்டு (Q3): 1 சூலை முதல் 30 செப்டம்பர் முடிய 92 நாட்கள்
  • நான்காம் காலாண்டு (Q4): 1 அக்டோபர் முதல் 31 டிசம்பர் முடிய 92 நாட்கள்.

இந்தியாவில்

ஊழியர்களுக்கு நாட்காட்டி ஆண்டு அடிப்படையில் ஊதியம், ஊதிய உயர்வு ஓய்வூதியம் மற்றும் விடுமுறைகள் வழங்கப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்க்ள்

  1. "calendar year". Merriam-Webster. Retrieved 6 August 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya