குவெம்பு
குவெம்பு (Kuvempu) என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994)[1] ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார்.[2] புட்டப்பா தமது ஆக்கங்கள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார். இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்று எழுதியுள்ளார். கருநாடக மாநிலப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது. வாழ்க்கை வரலாறுஇவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.[3] இவர் தந்தையின் ஊரான குப்பளியில் வளர்ந்தார்.[3][4] இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், பெங்களூர் மத்திய கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia