த. ரா. பேந்திரே
த. ரா. பேந்திரே(Dattatreya Ramachandra Bendre) என்பவர் கன்னடக் கவிஞர் ஆவார். கன்னடக் கவிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவராக அறியப்படுகிறார். இவரை வரமாகப் பெற்றதனால், வரகவி என்ற சிறப்பு பெயர் இவருக்கு உண்டு. கன்னடத்தில் எழுதி, ஞானபீட விருது பெற்றவர்களில் இவரும் ஒருவர்.[1] அம்பிகாதனயதத்தா என்ற புனைப்பெயரில் எழுதியவர். அம்பிகாவின் மகன் தத்தன் என்பது இந்தப் பெயரின் பொருள். இவருக்கு கர்நாடக கவி குல திலகம் என்ற பெயரும் உண்டு. தாத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே என்பது இவரது இயற்பெயர். இவருக்கு பத்மசிறீ விருது 1968 ஆம் ஆண்டுவழங்கப்பட்டது. 1969 இல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[2] வாழ்க்கைக் குறிப்புஆரம்பகால வாழ்க்கை, கல்விதாத்தத்ரேயா ராமசந்திர பேந்திரே தார்வாடு,கருநாடகத்தில் சனவரி 31,1986 இல்பிறந்தார்.இவர் கொங்கணஸ்த் பிராமணர் குடும்பத்தைச் சார்ந்தவர்.[3] இவருடைய தாத்தா சமசுகிருதம் இலக்கியத்தில் அறிஞர். இவருடைய தந்தையும் சமசுகிருத இலக்கியத்தில் அறிஞராக விளங்கியவர். பேந்திரேவுக்கு பன்னிரண்டு வயதாக இருக்கும் போது அவரின் தந்தை காலமானார். நான்கு ஆண் பிள்ளைகளில் பேந்திரே இளையவர். தார்வார்டுவில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். 1913 இல் பல்கலைக் கழக நுழைவுக்குத் தயாரானார். பின் புனேவில் உள்ள ஃபெர்கூசன் கல்லூரியில் சேர்ந்தார். 1918 இல் சமசுகிருதம், ஆங்கிலம் பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற்றார். பின் தார்வார்டு சென்று அங்குள்ள விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1919 இல் லட்சுமிபாய் என்பவரைத் திருமணம் செய்தார். கலைப்பிரிவில் தனது முதுகலைப் பட்டத்தை 1935 இல் நிறைவு செய்தார்.[4] தொழில்தார்வார்டுவில் உள்ள விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் , தற்போது இந்தப் பள்ளி வித்யாரன்ய உயர்நிலைப்பள்ளி என அழைக்கப்படுகிறது . பின் சோலாப்பூரில் உள்ள டி. ஏ. வி கல்லூரியில் கன்னடப் பேராசிரியராக 1944 முதல் 1956 வரை பணி புரிந்தார். பின் தார்வார்டுவிலுள்ள அனைத்திந்திய வானொலியின் ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்டார். பிற்கால வழ்வுபேந்திரா நண்பர்கள் குழு என்பதனை 1922 இல் உருவாக்கினார். இந்தக் குழுவில் பண்பாடு மற்றும் இலக்கியம் போன்றவற்றில் நாட்டம் கொண்டவர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும் இதில் கருநாடகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் இந்த நண்பர்கள் குழுவில் இருந்தனர். குறிப்பாக ஆனந்த கந்தா, சம்பா ஜோசி, சித்தவனஹள்ளி கிருஷ்ணா சர்மா, என்கே, ஜி. பி. ஜோசி, கிருஷ்ண குமார் கல்லூர், வி. கே. கோகாக், ஆர். எஸ்.முரளி, மற்றும் பந்தரீனதட்சர் கலகலி ஆகியோர் இருந்தனர்.[5][6] பின் 1926 இல் நாத- ஹப்பா எனும் பண்பாட்டு இயக்கத்தைத் தொடங்கினார். இது நாட்டின் கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக அமைந்தது. இன்றளவும் கருநாடகாவில் இந்த இயக்கம் நடைமுறையில் உள்ளது.இது இந்துத் திருவிழாவான நவராத்திரி சமயத்தில் கொண்டாடப்படுகிறது. நரபலி என்பதனைப் பற்றி எழுதியதற்காக ஆங்கிலேய அரசு இவரை 1932 ஆம் ஆண்டில் முகாத் எனும் ஊரில் வீட்டுக் காவலில் வைத்தது.[7] இவருக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் பாண்டுரங்கா மற்றும் வாமனா எனும் இரு மகன்கள் , மங்களா எனும் ஒரு மகள் மட்டுமே உயிர்வாழ்ந்தனர்.[8] 1943 இல் சிமோகா மாவட்டத்தில் நடந்த 27 ஆவது கன்னட இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். பின்பு கன்னட இலக்கிய மன்றத்தின் உறுப்பினர் ஆனார். 1972 ஆம் ஆண்டில் கர்நாடக அரசு இவரின் வாழ்க்கை பற்றிய விபரணத் திரைப்படம் ஒன்றைத் தயாரித்தது. எழுத்துத் துறைபேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப் புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். எழுதிய நூல்கள்
பெற்ற விருதுகள்
சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia