ராய்ச்சூர் மாவட்டம்

ராய்ச்சூர் மாவட்டம்
கர்நாடக மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தின் அமைவிடம்
கர்நாடக மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தின் அமைவிடம்
Map
Raichur district
ஆள்கூறுகள்: 16°13′N 77°21′E / 16.21°N 77.35°E / 16.21; 77.35
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடக
வருவாய் கோட்டம்குல்பர்கா
தலைமையிடம்ராய்ச்சூர்
வருவாய் வட்டங்கள்7
பரப்பளவு
 • மொத்தம்8,442 km2 (3,259 sq mi)
ஏற்றம்
400.0 m (1,312.3 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,28,812
 • அடர்த்தி230/km2 (590/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
584101,584102,584103
தொலைபேசி குறியீடு08532
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA-RA
வாகனப் பதிவுKA-36
மக்களவை தொகுதிராய்ச்சூர் மக்களவைத் தொகுதி
இணையதளம்https://raichur.nic.in/en/

ராய்ச்சூர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் ராய்ச்சூர் நகரம் ஆகும். இராய்சூர் நகரம், மாநிலத் தலைநகரான பெங்களூருக்கு வடகிழக்கே is 409 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..இதன் வடக்கில் யாத்கிர் மாவட்டம், வடமேற்கில் பிஜப்பூர் மாவட்டம் மற்றும் பாகல்கோட் மாவட்டம், மேற்கில் கொப்பள் மாவட்டம், தெற்கில் பெல்லாரி மாவட்டம் மற்றும் தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

புவியியல்

தக்காணப் பீடபூமியில் அமைந்த ராய்ச்சூர் மாவட்டத்தின் வடக்கில் கிருஷ்ணா ஆறும், தெற்கில் துங்கபத்திரை ஆறும் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

ராய்ச்சூர் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது:[1]

  • ராய்ச்சூர் வட்டம்
  • தேவதுர்கா வட்டம்
  • சிந்த்னௌர் வட்டம்
  • மான்வி வட்டம்
  • மாஸ்கி வட்டம்
  • சிர்வார் வட்டம்
  • லிங்கசுகுர்

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இராய்ச்சூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 19,28,812 ஆகும். அதில் ஆண்கள் 964,511 மற்றும் 964,301 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 59.56% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 84.72 %, இசுலாமியர் 14.10 %, கிறித்தவர்கள் 0.54% மற்றும் பிறர் 0.65% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya