டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
, (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; மலாய்: Lebuhraya Damansara–Puchong) (LDP) என்பது மலேசியாவில் சிலாங்கூர்பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள 40-கி.மீ. (24.9 மைல்) நெடுஞ்சாலை ஆகும்.[1]
ஆகிய வழித்தடங்கள், இந்த டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலையின் கணிசமான இடங்களில் மிக அருகில் செல்கின்றன.
வரலாறு
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் கட்டுமானப் பணிகள் லிங்காரான் டிரான்ஸ் கோத்தா ஓல்டிங்சு (Lingkaran Trans Kota Holdings Bhd)(Litrak) எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
23 ஏப்ரல் 1996-இல், டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் சாலையின் மேம்பாடு, வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக மலேசியா அரசாங்கத்திற்கும் லிட்ராக் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 1996-இல் தொடங்கி 1998 டிசம்பரில் முடிவடைந்தது. தொடக்கச் செலவு RM 1.1 பில்லியன்; மொத்தச் செலவு RM 1.4 பில்லியன். இந்த அதிவேக நெடுஞ்சாலை 25 ஜனவரி 1999-இல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.