துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை
துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை அல்லது கூட்டரசு சாலை 3113 (மலேசியா) ஆங்கிலம்: Tun Dr Lim Chong Eu Expressway அல்லது Federal Route 3113; சீனம்: 林倉祐大道; மலாய்: Lebuhraya Tun Dr Lim Chong Eu அல்லது Jalan Persekutuan 3113; என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள ஒரு விரைவுச்சாலை ஆகும். இந்தச் சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது.[1] 17.84 கி.மீ. (11.09 மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச் சாலை, பினாங்கு தீவின் கிழக்குக் கடற்கரையைச் சுற்றி வருகிறது. முன்னாள் பினாங்கின் முதல்வர் துன் டாக்டர் லிம் சோங் யூ நினைவாக 7 டிசம்பர் 2010-இல் அமைக்கப்பட்டது.[2] பொதுஇந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0, பத்து மாவுங் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் இரண்டு பிரிவுகள் உள்ளன: ஜெலுத்தோங் விரைவுச் சாலை (Jelutong Expressway); பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலை (Bayan Lepas Expressway). பின்னணி1983-ஆம் ஆண்டு பினாங்கு பாலம் கட்டப்படும் போது இங்கு ஒரு முன்னோடிச் சாலை உருவாக்கப் பட்டது. 1985-இல் சாலை கட்டுமானம் முடிவுற்றது. பின்னர், இந்தச் சாலை வடக்கு நோக்கி ஜெலுத்தோங் விரைவுச் சாலையாகவும்; தெற்கே பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலையாகவும் நீட்டிக்கப்பட்டது. முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் சோங் யூ 24 நவம்பர் 2010-இல் காலமானார். அவர் இறந்த பிறகு, 2010 டிசம்பர் 7-ஆம் தேதி, பினாங்கு மாநில அரசாங்கம் அவரின் நினைவாக அந்த விரைவுச் சாலைக்கு துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை எனப் பெயரை மாற்றியது.[3] துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலையில் தெங்கு குடின் – குளுகோர் சாலையும் ( மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia