கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை
கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை 7.3 km (4.5 mi) தொலைவு கொண்ட கெமுனிங்–சா ஆலாம் விரைவுச்சாலை, கோத்தா கெமுனிங் அருகே, E5 சா ஆலாம் விரைவுச்சாலையை (Shah Alam Expressway) கெமுனிங் சந்திப்பில் (Federal Highway Route 2 Interchange) இணைக்கிறது. பின்னர் கூட்டரசு சாலை 2-இன் (Federal Highway Route 2) வழியாக கிள்ளான் நகரம் வரைக்கும் செல்கிறது. இதற்கு முன்பு வரலாறுகெமுனிங்–சா ஆலாம் விரைவுச்சாலை கட்டுமானம் 2007-இல் தொடங்கியது. இந்த விரைவுச்சாலை பெர்சியாரான் சுல்தான் (Persiaran Sultan) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரைவுச்சாலை, சா ஆலாம் நகரத்தையும் சா ஆலாம் பிரிவு 24 வரையிலான பகுதிகளையும் உள்ளடக்கியது. இது சா ஆலாம் மாநகராட்சி (MBSA) (Shah Alam City Council) நிர்வாக எல்லைக்குள் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமானங்கள் 2010-ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் நிறைவு அடைந்தன. 18 மே 2010-இல் இந்த விரைவுச்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. சான்றுகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia