கூட்டரசு சாலை 217 (மலேசியா)
கூட்டரசு சாலை 217 (மலேசியா) அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது (ஆங்கிலம்: Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை புக்கிட் சாலில் நெடுஞ்சாலைகின்ராரா மற்றும் புக்கிட் சாலில் நகரங்களைக் கடந்து செல்லும் இந்தச் சாலை, மலேசியாவில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் சற்றே பழமையானது.[1] முன்பு காலத்தில் கோலாலம்பூரில் இருந்து பூச்சோங் செல்வதற்கு ஒரே ஒரு சாலைதான் இருந்தது. அதுதான் இந்த கோலாலம்பூர் - பூச்சோங் நெடுஞ்சாலை. பின்னர் காலத்தில் புக்கிட் சாலில் நெடுஞ்சாலையுடன் இணைக்கப் பட்டது. பொதுபுக்கிட் சாலில் நெடுஞ்சாலையின் ‘0’ கிலோமீட்டர் (Kilometre Zero), சிலாங்கூர், பூச்சோங் அருகே பூச்சோங் ஜெயா சாலைச் சந்திப்பில் தொடங்குகிறது. பூச்சோங்கில் உள்ள பூச்சோங் நகர மையத்தில் ‘0’ கிலோமீட்டர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புக்கிட் சாலில் நெடுஞ்சாலை, 1998-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது (1998 Commonwealth Games), சா ஆலாம் விரைவுச் சாலைக்கு அடுத்த நிலையில், புக்கிட் சாலில் தேசிய விளையாட்டு வளாகத்திற்குச் செல்லும் இரண்டாவது முக்கிய நெடுஞ்சாலையாக மாறியது. 2004-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை கூட்டரசு சாலை 217 (மலேசியா) என்று மலேசிய அரசிதழில் பதிவு செய்யப்பட்டது. வேக வரம்பு 90 கி.மீ. வரை அனுமதிக்கப் படுகிறது. கூட்டரசு சாலை 217 (மலேசியா) இடைச்சாலைகள்
மேற்கோள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia