கோவர்தனன்![]() திருமாலின், கிருஷ்ணாவதார காலத்தில், மழைக்கடவுளான இந்திரனுக்கே கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஒருமுறை இந்திர வழிபாட்டை, கிருஷ்ணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார். இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருட்டிணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். கிருஷ்ணரின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார் . அந்த மலை, கோபியர்களையும் கோபர்களையும் காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கிருஷ்ணர், கோவர்தனன் என்றும் பெயர் பெற்றார். கோவர்தனன் படக்காட்சியகம்
உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia