பாணாசூரன்
பாணாசூரன் (Bana or Banasura), பாகவத புராணம் கூறும் ஒரு கதை மாந்தர் ஆவார். வாமன அவதாரத்தின் போது, வாமனரால் பாதளத்திற்கு தள்ளப்பட்ட அசுரரான மகாபலி சக்கரவர்த்தியின் மகன் பாணாசூரன் ஆவான். பாணாசூரன் ஆயிரம் கைகள் கொண்டவன். எவரால் கொல்லப்படாத சிரஞ்சீவி வரம் பெற்றவர். பாணாசூரன், கிருஷ்ணாவதராத்தின் போது, கிருஷ்ணரால் வெல்லப்பட்டவர். [1][2] பானாசூரன் பண்டைய பரத கண்டத்தின் தற்கால மத்திய அசாம் பகுதிகளை, சோனிதபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவர். புராணங்களில் பாணாசூரன் அசுர குல மன்னராக கூறுகிறது. இவரது மகள் உஷா, கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவில் கண்டு, நேரில் மணந்தவர். கதை![]() ![]() பாணாசூரன், அசுரரான மகாபலி சக்கரவர்த்தியின் மகன் ஆவார். பெரும் வல்லமையும், சிவபக்தரான பாணாசூரன், தேவதச்சனான விஸ்வகர்மாவால் நிறுவப்பட்ட சிவபெருமானின் ரசலிங்கத்தை வழிபாடு செய்வர். தேவர்களையும் ஆட்டுவிக்கும் வலுமிக்க இந்த அசுர மன்னர் பெரும் இராச்சியத்தை ஆண்டவர். சிவ தாண்டவத்தின் போது, தனது ஆயிரம் கைகளால் மிருதங்கத்தை இசைத்து வரம் பெற்றவர். இவர் சிவ கணங்களில் ஒருவரானர். பாணாசூரனின் மகள் உஷா ஆவார். உஷா தன் கனவில் தோன்றிய கிருஷ்ணரின் அழகிய பேரனான அனிருத்திரனை, மாயமந்திரத்தால், துவாரகையிலிருந்து, தன் ஊருக்கு வரவழைத்துக் கொள்கிறாள். [3] தன் பேரனை காணாத கிருஷ்ணர், பின்னர் நடந்தவற்றை அறிந்து, பானாசூரனிடம் தன் பேரனை விடுவிக்கக் கோரினார். அதனை மறுத்த பானாசூரனிடம் போரிட்டு, அவனது ஆயிரம் கைகளில் இரண்டைத் தவிர மற்றவைகளை கிருஷ்ணர் வெட்டி விடுகிறார். [4][5][6][7][8] சிவபெருமான் வேண்டுதலால், பானாசூரனை கிருஷ்ணர் மன்னித்து விடுகிறார். பின்னர் பானாசூரனின் மகள் உஷா - அனிருத்தன் திருமணம் நடைபெறுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia