சம்ஹார தாண்டவம்

சம்ஹார தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

மிருகண்டு முனிவர் நெடுநாள் குழந்தைப் பேரு இன்றி இருந்தமையால் சிவபெருமானை நினைத்து தவமிருந்து மார்க்கண்டேயர் என்ற குழந்தையைப் பெற்றார். சிவ பக்தனாக வளர்ந்த மார்க்கண்டேயர் பதினாறு வயதில் இறந்துவிட வேண்டுமென விதியிருந்தது. இதனால் எமதர்மம் மார்க்கண்டேயர் உயிரை எடுக்க வந்த பொழுது, அவர் சிவலிங்கத்தினை ஓடிச் சென்று கட்டிக்கொண்டார். மார்க்கண்டேயரின் உயிரை எடுக்க ஏவிய பாசக்கயிறு லிங்கத்தின் மீது பட்டது, அதனால் எமதர்மனை அழிக்க சிவபெருமான் ஆடிய தாண்டவம் சம்ஹார தாண்டவமாகும். இந்த தாண்டவம் நிகழ்ந்த ஊர் திருக்கடவூராகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya