சிவபெருமானின் தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும். சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன.[1]
சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.
சிவதாண்டவத்தினைப் பற்றி தமிழிலக்கியமான கலித்தொகையின் இறைவணக்கத்தில் முதல் குறிப்பு உள்ளது. காரைக்கால் அம்மையின் பாடல்கள், எ எல் பாஷ்யம் சிவதாண்டவம் ஆகியவற்றிலும், சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
↑சைவமரபும் மெய்பொருளியலும் நூல் - நரசிம்மர் பக்கம் 243 சிவதாண்டவத்தின் மெயப்பொருளியல் கோட்பாடு