சிக்கல் நவநீதேசுவரர் கோவில்
சிக்கல் நவநீதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 83 ஆவது சிவத்தலமாகும். அமைவிடம்சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வசிட்டர், காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டுப் பூசனை முடிவில் அதை எடுக்க முயன்ற போது அது சிக்கிக் கொண்டது என்பது ஒரு தொன்னம்பிக்கை. இங்குள்ள சிக்கல் சிங்காரவேலர் சந்நிதி தனிச்சிறப்பு கொண்டது வழிபட்டோர்இக்கோயிலில் வழிபட்டோர்களில் விசுவாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர் ஆகியோர் அடங்குவர்.[1] சிக்கல் சிங்காரவேலர்இக்கோயிலில், சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சன்னதி உள்ளது. திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடந்ததாகக் கூறுவர். இருப்பினும் அதற்கான ஆரம்பம் இத்தலமேயாகும். இங்கு சஷ்டித் திருவிழாவின்போது, வேல்வாங்கும் நிகழ்வு நடைபெறும். அப்போது தாயிடம் வேலை வாங்கி முருகன் தன் சன்னதியில் அமர்வார். அந்த வேலின் சிறப்பின் காரணமாக சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகுவதாகக் கூறுவர்.[2] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia