சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் செயல்படும் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஆகும்.[3][4]
இத்தனியார் மருந்து நிறுவனம் சைரஸ் எஸ். பூனாவாலா எனும் பார்சி நபரால் 1966-இல் துவக்கப்பட்டது.[5] இந்நிறுவனம் பூனேவாலே முதலீடு மற்றும் தொழில்கள் குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும்.[6] இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அதர் பூனேவாலா ஆவார்.
மேலோட்ட்ப் பார்வை
இந்நிறுவனம் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் உலகின் பெரிய நிறுவனம் ஆகும்.[7] இந்நிறுவனம் ஆண்டுக்கு 130 கோடி (1.3 பில்லியன்) டோஸ் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் காச நோய்க்குகாசநோய்த் தடுப்பூசி மருந்து, இளம்பிள்ளை வாதம் நோய்க்கு தடுப்பூசி மருந்து, குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் மற்றும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்களுக்கான விஷ முறிவு மருந்துகள் உற்பத்தி செய்கிறது.[8][9][10]
2016-இல் ஐக்கிய அமெரிக்காவின் மசாசூட்ஸ் மருத்துவப் பள்ளியின் ஆதரவுடன் இணைந்து, பாம்பு மற்றும் நாய்க்கடிகளுக்கு, வெகு விரைவில் நஞ்சு முறிவு மருந்தை கண்டுபிடித்தனர்.[13][14]
கொரானா வைரஸ் தடுப்பு மருந்து
2020-இல் இந்நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் கூட்டாக, அஸ்டிரா ஜெனிக்கா நிறுவனத்துடன் (AstraZeneca) இணைந்து ChAdOx1 nCoV-19 எனும் பெயரில் கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆய்வு செய்து வருகிறது.[15][16]
இந்நிறுவனம் 10 கோடி (100 மில்லியன்) கொரானா தடுப்பு மருந்து டோஸ்களை இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.[17][18][19]. ஒரு டோஸ் கொரானா வைரஸ் தடுப்பு மருந்து ரூபாய் 225-க்கு விற்பனை செய்யப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.[20]
↑Kulkarni, Prasad S.; Raut, Sidram K.; Dhere, Rajeev M. (27 October 2014). "A post-marketing surveillance study of a human live-virus pandemic influenza A (H1N1) vaccine (Nasovac ®) in India". Human Vaccines & Immunotherapeutics9 (1): 122–124. doi:10.4161/hv.22317. பப்மெட்:23442586.
↑Kulkarni, Prasad S.; Sahai, Ashish; Gunale, Bhagwat; Dhere, Rajeev M (3 March 2017). "Development of a new purified vero cell rabies vaccine (Rabivax-S) at the serum institute of India Pvt Ltd". Expert Review of Vaccines16 (4): 303–311. doi:10.1080/14760584.2017.1294068. பப்மெட்:28276304.