தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 4 National Highway 4 (India)) அல்லது தே. நெ. 4, என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையாகும்.[1] இதன் நீளம் 230.7 கிமீ ஆகும். அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயரிலிருந்து திக்லிபூர் வரை செல்லும் இந்த சாலை, பெர்ராகுஞ்ச், பரதாங், கடம்தலா, ரங்கத், பில்லி கிரவுண்ட், நிம்புதேரா, மாயாபந்தர் மற்றும் திக்லிபூர் ஆகிய அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை அந்தமான் முதன்மைச் சாலை என்று அழைக்கப்படுகிறது. 1970களுக்கு முன்பு முதல் 1990களின் முற்பகுதி வரை கடல் வழியாகப் பல நாட்கள் எடுக்கும் பயணி மற்றும் பொருட்களின் போக்குவரத்தை இப்போது 10-12 மணிநேரங்களில் முடிக்க முடியும். தேசிய நெடுஞ்சாலை 4 ஆண்டு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் இயக்கம், சுகாதார வசதிகள் போன்றவற்றை அணுக உதவுகிறது. ஜர்வா காப்பு பகுதி இடையக மண்டலம் வழியாக ஜிர்காடாங் முதல் மத்திய நீரிணை வரை இச்சாலை செல்கிறது. இங்கு ஜாரவா பூர்வீகப் பழங்குடியினருடன் பயணிகளின் தொடர்பைக் குறைக்கச் சட்டங்கள் உள்ளன. ஆயுதமேந்திய பாதுகாவலர்களுடன் கூடிய வாகனக் குழுக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த நெடுஞ்சாலை தற்போது என். எச். ஐ. டி. சி. எல் கீழ் இரண்டு பெரிய பாலங்களை ₹1511.22 கோடி மதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டு கட்டுமானத்தில் உள்ளது.[2] முன்னதாக இந்த நெடுஞ்சாலைக்கு தே. நெ. 223 என எண் கொடுக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு மும்பை முதல் புனே வரை ஹூப்ளி முதல் பெங்களூரு முதல் சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முன்பு தே. நெ 4 என்று அழைக்கப்பட்டது. முன்பு தே. நெ. 4ஆக இருந்தது தற்பொழுது தே. நெ. 48 என மறுபெயரிடப்பட்டுள்ளது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia