இந்துஸ்தான் ஆண்டிபயோடிக்ஸ்
இந்துஸ்தான் ஆண்டிபயோடிக்ஸ் லிமிடெட்ஸ் (Hindustan Antibiotics Limited (HAL), என்பது இந்தியாவின் பிம்புரியை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு மருந்து பொருள் தயாரிக்கும் நிறுவனமாகும். இதுதான் இந்தியாவின் முதல் நோய் எதிர்ப்பு மருந்து பொருள்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்த்து.[1] வரலாறுஎச்ஏஎல் இந்தியாவில் மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் சமூக நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 1954 இல் இந்தியாவின் மூதல் பிரதமரான சவகர்லால் நேருவால் துவக்கப்பட்டது. இதில் 1955 இல் உற்பத்தி துவங்கியது. இது இந்தியாவில் ஏழைகள் மலிவு விலையில் மருந்துகள் பெற வேண்டும் என்று மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையாக கொண்டது. இந்நிறுவனத்துக்கு ரிஷிகேஷ் மற்றும் ஹைதராபாதில் ஆலைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு இரண்டு ஆலைகள் சென்னை மற்றும் முஸாபர்பூரில் உள்ளன. புணேயை ஆடுத்துள்ள பிம்பிரியில் அமைந்துள்ள இந்நிறுவன ஆலையில்தான் பென்சிலின் தயாரிக்கப்பட்டது. தற்போதைய நிலைஇந்நிறுவனம் இழப்பை சந்தித்ததால் 2014 மற்றும் 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மொத்த வர்த்தகம் ரூ. 14 கோடி. இழப்பு ரூ. 75 கோடியாக உயர்ந்தது. இந்நிறுவனத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட முதல்கட்டப் பணிகள் தோல்வியடைந்தன. அதன்பிறகு இரண்டாம் கட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia