பிம்பளே சௌதாகர்
பிம்பளே சௌதாகர் (Pimple Saudagar ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் பகுதியாகும். இது புனே மாநகராட்சிக்கு அருகில் உள்ளது. இப்பகுதி சிஞ்ச்வடுவிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அவுந்து மற்றும் பாணேர் பகுதிகளுக்கு மையத்தில் உள்ளது. இப்பகுதி குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் அதிகம் கொண்ட மாநகரப் பகுதியாகும். இதன் வெளிப்புறத்தில் ஹிஞ்சவடியில் இராஜிவ் காந்தி கணினி தொழில் நுட்ப பூங்கா உள்ளது. போக்குவரத்துபுனே - நாசிக் பட்டா சாலையில் அமைந்த பிம்பளே சௌதாகர் பகுதிக்கு அருகே அமைந்த தொடருந்து நிலையம், காசர்வாடி தொடருந்து நிலையம் ஆகும். புனே மாநகரப் பேருந்துகள் பிம்பிளே சௌதாகர் பகுதியை புனே, பிம்பிரி, சிஞ்ச்வடு, பிம்பளே குரவ், ஹிஞ்சவடி, புனே சந்திப்பு தொடருந்து நிலையம், அவுந்து, சங்கவி போன்ற பகுதிகளுடன் இணைக்கிறது. பள்ளிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia