செ. செந்தில்குமார்
செ. செந்தில்குமார்[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாஸை விட 63,301 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார்.[2][3] குடும்பம்இவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் மருத்துவப் படிப்பை படித்துள்ளார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.[4] இவரது தாத்தா டி. என். வடிவேலு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாகவும், சேலம் - தருமபுரி - பெங்களூரு ரயில் போக்குவரத்துக்கும் காரணமாக இருந்தவர். சர்ச்சைடிசம்பர் 2023ல் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது மக்களவையில், இந்தி பேசும் மாநிலங்களான இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா கட்சி வெல்வதற்குக் காரணம் அவை 'கோமிய மாநிலங்கள்' என்பதாலேயே என செந்தில் குமார் பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளாகிய நிலையில் அவர் மக்களவையிலும் தனது டுவிட்டர் பக்கத்திலும் தமது பேச்சிற்கு மன்னிப்புத் தெரிவித்தார்.[5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia