செ. இராமலிங்கம்
செ. இராமலிங்கம் (S. Ramalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சேர்ந்தவர்.[2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அரசியல் வாழ்க்கைஇராமலிங்கம், 1977, 1980, 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருவிடைமருதூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6] இவர் இத்தொகுதியில், ஏழுமுறை போட்டியிட்டு, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] வகித்த பதவிகள்
வகிக்கும் பதவிகள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia