தபனான் பிராந்தியம்
தபனான் பிராந்தியம் (ஆங்கிலம்: Tabanan Regency; இந்தோனேசியம்: Kabupaten Tabanan) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும்.[2] இந்தப் பிராந்தியத்திற்கு கிழக்கில் உள்ள பாடுங் பிராந்தியம்; மற்றும் தென்பசார் நகருடன் ஒப்பிடும்போது சற்று வளர்ச்சி அடையாத பிராந்தியமாகக் காணப்படுகிறது. தபனான் பிராந்தியம் தெற்கே இந்தியப் பெருங்கடலுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது; வடக்கே பிரத்தான் ஏரியால் சூழப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் மிக உயரமான சிகரம் படுகாரு மலையில் (Gunung Batukaru) உள்ளது. தபனான் பிராந்தியத்தின் பரப்பளவு 1,013.88 கிமீ² ஆகும். இது தபனான் பிராந்தியத்தை பாலியில் 3-ஆவது பெரிய பிராந்தியமாகப் பதிவு செய்கிறது. தபனான் பிராந்தியம் 839.33 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது; மற்றும் 2000-ஆம் ஆண்டில் 386,850 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. 2010-இல் 420,913 ஆக உயர்ந்தது. பின்னர் 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 461,630 ஆக உயர்ந்து காணப்பட்டது; 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மதிப்பீடு 469,340 ஆக இருந்தது.[3] இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் தபனான் நகரம் ஆகும். தபனான் நகரில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் கடலோரப் பாறைத் தீவான தானா லாட் (Tanah Lot) முதன்மைத் தலமாக விளங்குகிறது.[4] சுற்றுலா மேம்பாட்டு கட்டுப்பாடுபாலி தீவின் மிகப்பெரிய பரப்பளவிலான 53,000 எக்டேர் வேளாண் நிலங்களைப் பாதுகாக்க தீவிர முயற்சிகள் எடுத்து வரப்படுகின்றன. அந்த வகையில், தபனான் பிராந்திய நிர்வாகம் இனிவரும் காலங்களில் நட்சத்திர நகர தங்கும் விடுதிகளை உருவாக்க அனுமதிப்பது இல்லை என முடிவு செய்துள்ளது. இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டுடன், சுற்றுலா வசதிகள் அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுலா கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்டால், கட்டிடங்களுக்கு 30% நிலப்பரப்பும், நெல் வயல்கள் அல்லது பிற வேளாண் தோட்டங்களுக்கு 70% நிலப்பரப்பும் ஒதுக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தபனான் பிராந்திய நிர்வாகம், 300 எக்டேர் நெல் வயல் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தையும்; பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே 100 எக்டேர் வீட்டுவசதி மண்டலத்தையும் உருவாக்க முடிவு செய்துள்ளது. பொதுதபனான் பிராந்தியம் ஒரு வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் வறண்ட காலம் மற்றும் மழைக்காலம் என இரண்டு தனித்துவமான பருவங்கள் உள்ளன. இடைக்கால பருவங்களும் உள்ளன. காற்றின் வெப்பநிலை மாறுபடும். சராசரியாக வெப்பநிலை 27.60 C ஆகும். நீர்ப்பாசன அமைப்புகள் கடற்கரையின் வடிவம் மற்றும் மழைப்பொழிவால் பாதுகாக்கப்படுகின்றன. இது நீர் சேமிப்பு மற்றும் நீர்ப்பாசனத்திற்கான ஆதாரமாகவும் விளங்குகிறது.[5] நிர்வாக மாவட்டங்கள்தபனான் பிராந்தியம் பத்து மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.
காலநிலைதபனான் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிதமான மழைப்பொழிவும், அக்டோபர் முதல் மார்ச் வரை அதிக மழைப்பொழிவும் இருக்கும்.
காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
சான்றுகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia