இது லோவினா கடற்கரைக்கு கிழக்கே அமைந்துள்ளது. இது புலேலெங் மாவட்டத்தின் மையமாக உள்ளது. இதன் பரப்பளவு 46.94 கிமீ²; மற்றும் 2022-ஆம் ஆண்டில் 153,930 மக்கள் தொகையைக் கொண்டது.[1] இது பாலி தீவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.[3]
சிங்கராஜா நகரம், நெல் மற்றும் காப்பி உற்பத்திப் பொருட்களின் வணிக மையமாக விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் அருகிலுள்ள ஜாவாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கைவினைப் பொருட்களில் மணற்கல் செதுக்குதல்; நெசவு; கூடை, தொப்பி, பை மற்றும் விசிறி தயாரித்தல்; மற்றும் தோல் வேலைப்பாடு ஆகியவை அடங்கும்.
பொது
அகமத் யானி தெரு
1849 முதல் 1960 வரை பாலி மற்றும் சிறு சுண்டா தீவுகளுக்குஇடச்சு குடியேற்றவியத்தின் தலைநகரமாக சிங்கராஜா இருந்தது. தெற்கில் புக்கிட் தீபகற்பம் வளர்ச்சி பெறும் வரையில் இந்த நகரம் ஒரு நிர்வாக மையமாகவும், பயணிகள் பெரும்பாலோர் வருகை தரும் துறைமுகமாகவும் இருந்தது.
சிங்கராஜாவிலிருந்து கிழக்கே 4 மைல் [7 கிமீ] தொலைவில் உள்ள சாங்சிட், தென்கிழக்கே சர்வான், கிழக்கே யே சானி ஆகிய இடங்கள் பழைய இந்து கோயில்களின் தளங்களாகும்.[2]
சிங்கராஜாவில் வெப்பமண்டல சவன்னா காலநிலை (Aw) உள்ளது, சூன் முதல் அக்டோபர் வரை மழைப்பொழிவு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கு. திசம்பர் முதல் மார்ச் வரை கனமழை பெய்யும். ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் மிதமான மழை பெய்யும்.