பெடுகுல்
பெடுகுல் (ஆங்கிலம்; இந்தோனேசியம்: Bedugul) என்பது இந்தோனேசியா, பாலியின் ஒரு மலை ஏரியில் உள்ள ஒரு சுற்றுலா பகுதியாகும். இது பிரத்தான் ஏரியின் மைய-வடக்கு பகுதியில், தென்பசார், சிங்கராஜா நகரங்களுக்கு இடையிலான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. பெடுகுல் சுற்றுலா பகுதிக்கு அருகில், சண்டிகுனிங், பஞ்சசாரி, பச்சூங் மற்றும் வானகிரி போன்ற கிராமங்கள் உள்ளன. தபனான் பிராந்தியத்தில் (Tabanan Regency) தென்பசார் நகரிலிருந்து வடக்கே 48 கி.மீ. (30 மைல்) தொலைவிலும்; சிங்கராஜா நகரத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. (12 மைல்) தொலைவிலும் பெடுகுல் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பிராட்டன் ஏரி, பூயான் ஏரி மற்றும் தம்பளிங்கான் ஏரி (Lake Tamblingan) என மூன்று எரிமலைப் பள்ளத்தாக்கு ஏரிகள் உள்ளன. பொது![]() பெடுகுல் நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் (4,900 அடி) உயரத்தில் அமைந்திருப்பதால் லேசான மலை காலநிலையை அனுபவிக்கிறது. பெடுகுலில் உள்ள முக்கிய வழிப்பாட்டுத் தளம் உலுன் தானு பிரத்தான் கோயில் (Pura Ulun Danu Bratan) ஆகும். இது யுனெஸ்கோவால் சுபாக் நீர்ப் பாசன அமைப்பின் (Subak) பட்டியலில் உலகப் பாரம்பரிய களம் எனும் தகுதியைப் பெற்றுள்ளது;[1] மற்றும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவான பாலி தாவரவியல் பூங்காவும் (Bali Botanic Garden) இங்குதான் உள்ளது. பாலி தாவரவியல் பூங்காபாலி தாவரவியல் பூங்கா, இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகார்னோவின் ஆதரவின் கீழ் சூலை 15, 1959 அன்று நிறுவப்பட்டது. இது 157.5 எக்டேர் (389 ஏக்கர்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது; மற்றும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய தாவரவியல் பூங்கா எனும் சாதனைத் தடத்தைப் பதிக்கிறது.[2] கடல் மட்டத்திலிருந்து 1,250 மீட்டர் முதல் 1,450 மீட்டர் வரை உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 2,000 வகையான தாவரங்கள், ஆர்க்கிட், பிகோனியா செடிவகைகள், மூலிகை தாவரங்கள், மூங்கில் வகைகள், 20,000 தாவர மாதிரிகள் உள்ளன. இங்கிருந்து பிரத்தான் ஏரியின் காட்சிகளை நன்கு இரசிக்கலாம்.[3][4] காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia