தாமிரம்(II) குளோரைடு
காப்பர்(II) குளோரைடு அல்லது தாமிர(II) குளோரைடு என்பது CuCl2 என்ற வேதியியல் வாய்பாடு உடைய கனிமச் சேர்மம் ஆகும். வெளிர்ப் பழுப்பு நிறத் திடப்பொருள். இது மெதுவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீல-பச்சை நிறமுடைய டைஐதரேட்டை உருவாக்குகிறது. தாமிர(II) சேர்மங்களில் தாமிர சல்பேட்டிற்கு அடுத்ததாக தாமிர(II) குளோரைடு உள்ளது. இவை முறையே டோல்பாசைட்டு (tolbachite ) மற்றும் எரியோசால்சைட் (eriochalcite) என்ற இரண்டு அரிதான தாதுக்களில் இயற்கையாகவே நீரற்ற மற்றும் டைஐதரேட்டு வடிவங்களில் காணப்படுகின்றன.[2] அமைப்புநீரற்ற தாமிர(II) குளோரைடு திரக்கப்பட்ட கேட்மியம் அயாேடைடு வின் வடிவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மையக்கருத்தின் அடிப்படையில் எண்முகி வடிவத்தின் மையத்தில் தாமிரம் உள்ளது. ஜான்-டெல்லர் விளைவினால் பெரும்பாலான தாமிர(II) சேர்மங்கள் எண்முகி அமைப்பில் இருந்து உருத்திரிபு அடைந்துள்ளன. மூலக்கூறு சுழல்தடத்தில் விரவி உள்ள ஒரு டி-எலெக்ட்ரான், ஒரு ஜோடி குளோரைடு ஈந்தணைவி உடன் வலிமையான எதிர் பிணைப்பில் உள்ளதை இது விவரிக்கிறது. CuCl2 · 2H2O இல் தாமிரம் மீண்டும் அதிகளவு உருத்திரிபு எண்முகி அமைப்பினைப் பெறுகிறது. தாமிரம் மையத்தில் இரண்டு நீர் ஈந்தணைவி மற்றும் நான்கு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டு மற்ற தாமிரத்துடன் மையத்தில் சமச்சீரற்ற பாலத்தின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.[3] தாமிரம்(II) குளோரைடு பாரா காந்நத்தன்மை உடையது. 1944 ல் ஏவிசெனி சவாசுகி ( Yevgeny Zavoisky) என்பவரால் முதன் முதலில் இலத்திரான் பாரா காந்நத்தன்மை உடனிசைவைக் கண்டறிய CuCl2·2 H2O பயன்படுத்தப்பட்டது.[4][5] பண்புகள் மற்றும் வினைகள்தாமிர(II) சேர்மத்தின் செறிவு, வெப்பநிலை, மற்றும் கூடுதல் குளோைரடு அயனிகள் இவற்றைப் பொறுத்தே தாமிரம்(II) குளோரைடின் நீர்த்த கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. [Cu(H2O)6]2+ நீல நிறத்திலும் மற்றும் [CuCl2 + x] [6] வாய்பாட்டினைக் கொண்டுள்ள ஆலைடு சேர்மங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தினையும் கொண்டுள்ளன. நீரார்பகுத்தல்தாமிர(II) குளோரைடு கரைசலை காரத்துடன் சேர்க்கும் போது தாமிர(II) ஐதராக்சைடு வீழ்படிவாக கிடைக்கிறது. : CuCl2 + 2 NaOH → Cu(OH)2 + 2 NaCl ![]() பகுதியளவு நீரார் பகுக்கும்பொழுது தாமிர ஆக்சிகுளோரைடு கிடைக்கிறது. Cu2Cl(OH)3, ஒரு பிரபலமான பூஞ்சைக் கொல்லி. தயாரிப்புதாமிரம்(II) குளோரைடு வணிக ரீதியாக தாமிரத்தை குளோரினேசன் செய்வதன் மூலம் பெறப்படுகிறது. : Cu + Cl2 + 2 H2O → CuCl2(H2O)2 பாதுகாப்புகாப்பர்(II) குளோரைடு நச்சுத் தன்மை உடையது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை குடிநீரில் 5 பிபிஎம் க்கு கீழே உள்ள செறிவினை மட்டுமே அனுமதிக்கின்றன. மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia