தாமிர ஆக்சலேட்டு (Copper oxalate) CuC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல்சேர்மமாகும்.[3] தாமிரமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நடைமுறையில் தாமிர ஆக்சலேட்டு நீர், ஆல்ககால், ஈதர் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையாது. ஆனால் அம்மோனியம் ஐதராக்சைடில் கரையும். தாமிர ஆக்சலேட்டு ஒரு நீரேற்றாக உருவாகிறது. அமில-நீல படிகங்களை இது உருவாக்குகிறது.[4]
ஓர் அரைநீரேற்றாக தாமிர ஆக்சலேட்டு என்பது ஒரு நீல-வெள்ளை திண்மமாகும். இது நடைமுறையில் தண்ணீரில் கரையாதது. 200 பாகைசெல்சியசு வெப்பநிலையில், படிகமயமாக்கல் காரணமாக இது தண்ணீரை இழக்கிறது. தாமிர ஆக்சலேட்டு கார உலோக ஆக்சலேட்டுகள் மற்றும் அம்மோனியம் ஆக்சலேட்டுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது:
பயன்கள்
தாமிர ஆக்சலேட்டு கரிம வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது. அசிட்டைலேற்றம் பெற்ற அசிட்டாலை நிலைநிறுத்தவும் இது பயன்படுகிறது.[6]
↑Royappa, A. Timothy; Royappa, Andrew D.; Moral, Raphael F.; Rheingold, Arnold L.; Papoular, Robert J.; Blum, Deke M.; Duong, Tien Q.; Stepherson, Jacob R. et al. (November 2016). "Copper(I) oxalate complexes: Synthesis, structures and surprises". Polyhedron119: 563–574. doi:10.1016/j.poly.2016.09.043.