தாமிர சிலிசைடு
தாமிர சிலிசைடு (Copper silicide) என்பது Cu5Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஐந்தாமிர சிலிசைடு என்றும் அழைக்கப்படுகிறது. தாமிர சிலிசைடானது சிலிக்கானுடன் தாமிரம் இணைந்து உருவாகும் ஓர் ஈரிணைச் சேர்மமாகும். மேலும் இதுவொரு இடையுலோகச் சேர்மமாகவும் இருக்கிறது. அதாவது ஓர் அயனச் சேர்மம் மற்றும் ஓர் உலோகக் கலவை இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகளைக் கொண்டிருக்கிறது. நீரில் கரையாத இப்படிகத் திண்மம் வெள்ளியைப் போலக் காணப்படுகிறது. தாமிரத்தையும் சிலிக்கானையும் சேர்த்து சூடாக்குவதால் தாமிர சிலிசைடு தோன்றுகிறது. பயன்கள்தாமிரம் அடிப்படையிலான சில்லுகளை வினைமுடக்க தாமிர சிலிசைடின் மெல்லிய அடுக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு இச்சேர்மம், விரவல் தடுப்பி, மின்னிடப்பெயர்ச்சி மற்றும் விரவல் சுருக்கியாகச்[2] செயலாற்றுகிறது. கரிம சிலிக்கான் தயாரிக்க உதவும் தொழிற்சாலை முறை உற்பத்தியான நேரடிச் செயல்முறையில் தாமிர சிலிசைடு தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில், தாமிர சிலிசைடு , சிலிக்கானுடன் மெத்தில் குளோரைடு சேரும் வினைக்கு வினையூக்கியாகச் செயல்படுகிறது. தொழில்முறையில் நிகழும் இவ்வினை உபயோகமுள்ள இருமெத்தில் இருகுளோரோசிலேனைத்:[3] தருகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia