தாமிர(II) ஆர்சனேட்டு
தாமிர ஆர்செனேட்டு (Copper arsenate) Cu3(AsO4)2.4H2O, அல்லது Cu5H2(AsO4)4.2H2O), என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது தாமிர ஆர்த்தோஆர்செனேட்டு, டிரைகாப்பர் ஆர்செனேட்டு, குப்ரிக் ஆர்செனேட்டு அல்லது டிரைகாப்பர் ஆர்த்தோஆர்செனேட்டு எனவும் அழைக்கப்படுகிறது. இது நீலம் அல்லது நீலம் கலந்த பச்சை நிறப் பொடியாகக் காணப்படுகிறது. நீர் மற்றும் ஆல்ககாலில் கரையாதது மற்றும் நீரிய அம்மோனியம் மற்றும் நீர்த்த அமிலங்களில் கரையக்கூடியது. இதன் சிஏஎசு எண் 7778-41-8 பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம் அல்லது 10103-61-4 பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம். பயன்கள்தாமிர ஆர்செனேட்டு விவசாயத்தில் ஒரு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது. இது களைக்கொல்லியாகவும், பூஞ்சைக்கொல்லியாகவும் மற்றும் எலிக்கொல்லியாவும் கூட பயன்படுகிறது. இது நத்தை போன்ற உயிரினங்களுக்கான துாண்டில் உணவுகளில் நச்சாகப் பயன்படுகிறது. தாமிர ஆர்செனேட்டானது தாமிர ஆர்செனைட்டுக்கான(குறிப்பாக நிறமிப் பொருள் என்ற அடிப்படையில்) பொருந்தாப் பெயராகவும் உள்ளது. இயற்கை மூலங்கள்நீரற்ற தாமிர ஆர்செனேட்டானது, Cu3(AsO4)2, இயற்கையில் "லாம்மெரைட்டு"[2] என்ற கனிமமாகக் காணப்படுகிறது. தாமிர ஆர்செனேட்டு டெட்ராஐதரேட்டு, Cu3(AsO4)2.4H2O, இயற்கையில் "ரோலன்டைட்டு" என்ற கனிமமாகக் காணப்படுகிறது.[3] தொடர்புடைய சேர்மங்கள்தாமிர ஆர்செனேட்டு ஐதராக்சைடு அல்லது கார தாமிர ஆர்செனேட்டு (Cu(OH)AsO4) ஒரு கார வகை சேர்மமாகும். இதன் சிஏஎசு எண் 16102-92-4 பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம். . இது இயற்கையில் ஒலிவெனைட்டு கனிமமாகக் காணப்படுகிறது. இது ஒரு பூச்சிக்கொல்லியாகவும், பூஞ்சைக்கொல்லியாகவும், மற்றும் உண்ணிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு தாய்லாந்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.[4] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia