தாமிர(II) நைட்ரேட்டு
தாமிர(II) நைட்ரேட்டு (Copper(II) nitrate), Cu(NO3)2 என்ற வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது நீல நிறப் படிகம் ஆகும். நீரற்ற காப்பர் நைட்ரேட்டானது அடர் ஊதா-பச்சை நிறத்தை உடையது மற்றும் வெற்றிடத்தில், 150-200 °செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகிறது .[3] தாமிர நைட்ரேட்டு ஐந்து வெவ்வேறான ஆண்டுகளாக காணப்படுகிறது மிகவும் பொதுவானவை மூஐதரேட்டு மற்றும் எக்சாஐதரேட்டு ஆகியவையாகும். இந்த சேர்மங்கள் ஆய்வகப்பயன்பாட்டை விட வணிகரீதியாக அதிக பயன்பாட்டைக் கொண்டுள்ளது. தாமிர நைட்ரேட்டின் தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் வினைகள்![]() நீரேற்றப்பட்ட தாமிர நைட்ரேட்டு நீரற்ற சேர்மதை நீரேற்றம் செய்வதன் மூலமாகவோ அல்லது உலோக தாமிரத்தை வெள்ளி நைட்ரேட்டு நீர்க்கரைசலுடன் அடர் நைட்ரிக் காடி முன்னிலையில் வினை படுத்துவதன் மூலம் பெறலாம்:[4]
நீரற்ற Cu(NO3)2 ஆனது தாமிரம் உலோகத்தை டைநைட்ரசன் டெட்ராக்சைடுடன் (N2O4) சேர்த்து சூடுபடுத்தும்போது பெறப்படுகிறது:
நீரேற்றம் செய்யப்பட்ட தாமிர நைட்ரேட்டை வெப்ப படுத்துவதன் மூலம் நீர் நீக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியானது Cu(NO3)2 க்கு பதிலாக ஆக்சைடுகளையே தந்தது. 80 ° செல்சியசு வெப்பநிலையில், ஐதரேட்டுகள் காரத்துவம் கொண்ட தாமிர நைட்ரேட்டுகள் (Cu2(NO3)(OH)3) ஆக மாறின. 180 °செல்சியசு வெப்பநிலையில்,CuO ஆக மாறுகின்றன.[4] இந்த வினைபடு தன்மையைப் பயன்படுத்தி தாமிர நைட்ரேட்டானது சிதைவடையும் வரை வெப்பப்படுத்தப்பட்டு வெளிவரும் புகையானது நேரடியாக நீருக்குள் செலுத்தப்பட்டு நைட்ரிக் காடி தயாரிக்கப்படுகிறது. இந்த முறையானது, ஒஸ்டுவால்டு செயன்முறையில் உள்ள கடைசி படிநிலையை ஒத்தது. சமன்பாடு பின்வருமாறு:
இயற்கையான கார தாமிரா நைட்ரேட்டுகள் அரியவகை கனிமங்களான கெர்கார்டைட்டு மற்றும் ரெளயாயைட்டுகளை உள்ளடக்கியவை ஆகும். இந்த இரண்டு கனிமங்களும் Cu2(NO3)(OH)3 இன் பல் உருவ வடிவங்களாகும்.[5] அமைப்புநீரற்ற தாமிர(II) நைட்ரேட்டுநீரற்ற தாமிர(II) நைட்ரேட்டானது இரண்டு வரையளவற்ற பல்உருவங்களில் படிகமாக்கப்படுகின்றது.[6][7] α-மற்றும் β-Cu(NO3)2 முழுவதுமாக முப்பரிமாண அணைவு பலபடி வலைப்பின்னல்களைக் கொண்டுள்ளன. ஆல்பா வடிவமானது ஒரே ஒரு Cu சூழலை, [4+1] அணைவு அமைப்பையும் கொண்டுள்ளது, ஆனால் பீட்டா வடிவமானது இரண்டு தாமிர மையங்களையும் ஒரு [4+1] தள சதுர அணைவு அமைப்பையும் கொண்டுள்ளது. நைட்ரோமீத்தேன் வரையளவு "[4+ 1] அணைவு" அமைப்பிற்கும் சாதகமாக உள்ளது. இந்த அமைப்பில் நான்கு குறுகிய Cu-O பிணைப்புகள் ( தோராயமாக 200 பிகோ மீட்டர் நீளம்) மற்றும் ஒரு ஒரு நீளமான பிணைப்பு (240 பிகோமீட்டர் நீளம்) இடம் பெற்றுள்ளன.[8] இவை அணைவு ஆகும். இவற்றில் தாமிர(II) மையங்களும், நைட்ரேட்டு தொகுதிகளும் முடிவற்ற சங்கிலியாக இடம் பெற்றுள்ளன. வாயு நிலையில், தாமிர(II) நைட்ரேட்டானது இரண்டு இருமுனைய இணைப்பு நைட்ரேட்டு ஈந்தணைவிகளைக் கொண்டுள்ளது.[9] நீரேற்றம் செய்யப்பட்ட தாமிர(II) நைட்ரேட்டுஐந்து ஐதரேட்டுகள் அறியப்படுகின்றன: ஒற்றை ஐதரேட்டு (Cu(NO3)2·H2O),[7] செஸ்கியூஐதரேட்டு(Cu(NO3)2·1.5H2O), எமிபென்டாஐதரேட்டு (Cu(NO3)2·2.5H2O),[10] மூஐதரேட்டு(Cu(NO3)2·3H2O),[11] மற்றும் ஒரு எக்சாஐதரேட்டு([Cu(H2O)6](NO3)2).[12] எக்சா ஐதரேட்டு ஒரு ஆச்சரியமூட்டும் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஜென்மத்தில் Cu-O பிணைப்பு நீளங்கள் அனைத்தும் சமமாக உள்ளன. இது எண்முகி வடிவ Cu(II) அணைவுச் சேர்மங்களின் குணாதிசயமான வழக்கமான ஜான் டெல்லர் விளைவின் காரணமான அமைப்பு சீர்குலைவைனை உணர்த்துவதாக இல்லை. இந்த இந்த விளைவற்ற தன்மை வலிமையான ஐதரசன் பிணைப்பு காரணமாக Cu-O பிணைப்புகளின் மீட்சி தன்மையை வரையறைக்குள் கொணர்வதால் ஏற்படுவதாகும். மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia