திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார், இலங்கைத் தமிழரசுக் கட்சி
24 சூன் 2025 முதல்
பிரதித் தலைவர்
கயிலைநாதன் வயிரவநாதன், சுயேச்சை
24 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்20
அரசியல் குழுக்கள்
அரசு (6)

எதிர் (14)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்பு முறைத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை (Trincomalee Town and Gravets Divisional Council) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கீழ் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]

  1. சாம்பல்தீவு
  2. புளியங்குளம் (2 உறுப்பினர்கள்)
  3. கன்னியா
  4. கப்பல்துறை
  5. ஆந்தன்குளம்
  6. பாலையூற்று
  7. சிங்கபுரம் (2 உறுப்பினர்கள்)
  8. காவட்டிகுடா
  9. வெள்ளைமணல் (2 உறுப்பினர்கள்)

தேர்தல் முடிவுகள்

2011 உள்ளாட்சித் தேர்தல்

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 8,986 47.96% 5
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 6,353 33.91% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 2,869 15.31% 1
இலங்கை லிபரல் கட்சி 347 1.85% 0
  மக்கள் விடுதலை முன்னணி 169 0.90% 0
  சுயேச்சைக்குழு 11 0.06% 0
செல்லுபடியான வாக்குகள் 18,735 100.00% 9
செல்லாத வாக்குகள் 901
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 19,636
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,791
வாக்குவீதம் 61.77%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 7,249 26.20% 7 0 7
  இலங்கை பொதுசன முன்னணி 6,177 22.33% 3 2 5
  ஐக்கிய தேசியக் கட்சி 3,955 14.30% 2 1 3
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,277 8.23% 0 2 2
  சுயேச்சைக் குழு 2,138 7.73% 0 2 2
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,001 7.23% 0 1 1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 1,978 7.15% 0 1 1
தமிழர் சமூக சனநாயகக் கட்சி 1,294 4.68% 0 1 1
  மக்கள் விடுதலை முன்னணி 594 2.15% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 27,663 100.00% 12 10 22
செல்லாத வாக்குகள் 496
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 28,159
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,167
வாக்குவீதம் 80.07%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 தேர்தலில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவராக மருத்துவர் எலியேசர் ஞானநாயகம் ஞானகுணாளன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கைலாயநாதன் வைரவநாதன் (சுயேச்சைக் குழு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5] 11 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 5,482 24.40% 6 0 6
  தேசிய மக்கள் சக்தி 4,874 21.69% 3 1 4
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3,273 14.57% 0 3 3
  ஐக்கிய மக்கள் சக்தி 2,340 10.41% 2 0 2
  சுயேச்சைக் குழு 4 1,608 7.16% 0 1 1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 922 4.10% 0 1 1
  சுயேச்சைக் குழு 5 894 3.98% 0 1 1
  சுயேச்சைக் குழு 1 705 3.14% 0 1 1
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு 652 2.90% 0 1 1
  சுயேச்சைக் குழு 2 491 2.19% 0 0 0
  ஐக்கிய தேசியக் கட்சி 450 2.00% 0 0 0
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 368 1.64% 0 0 0
  சுயேச்சைக் குழு 3 253 1.13% 0 0 0
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 101 0.45% 0 0 0
மக்கள் போராட்டக் கூட்டணி 55 0.24% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 22,468 100.00% 11 9 20
செல்லாத வாக்குகள் 498
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 22,966
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,617
வாக்குவீதம் 64.48%

2025 தேர்தலில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவராக வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கையிலைநாதன் வைரவநாதன் (சுயேச்சைக் குழு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  5. "Local Authorities Election - 6.05.2025 Trincomalee District Trincomalee Town and Gravets Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 27 June 2025. Retrieved 27 June 2025.
  6. "திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி தமிழரசு வசம்". வணக்கம்London. Archived from the original on 27 சூன் 2025. Retrieved 27 சூன் 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya