திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்
திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருநகரி எனும் கிராமத்தில் அமைந்த இரட்டைத் தலங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவக் கோயிலாகும். இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். கோயில் மூலவர் பெயர் வேதராஜன், தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார்.[1] திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. கோயில் உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும். இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சுற்றுதிருசுற்றில் வலப்புறம் ஆண்டாள் சன்னதியும், இடப்புறம் தாயார் சன்னதியும் உள்ளது. திருச்சுற்றில் பின்புறம் யோகநரசிம்மப்பெருமாள் உள்ளார். பூஜைகள் – திருவிழாக்கள்இக்கோயில் மூலவருக்கு நாள்தோறும் நான்கு கால பூஜையும், வைகாசி மாதத்தில் 14 நாட்கள் பிரம்மோற்சவமும் நடைகிறது.[2] ஆண்டு தோறும், தை மாதம் பௌர்ணமி அன்று திருமங்கை ஆழ்வார் மங்கள சாசன உற்சவம் சிறப்பாக நடைகிறது. அவ்வமயம் திருமங்கை ஆழ்வாரின் உற்சவ சிலையைப் பல்லக்கில் ஏற்றி திருமணிமாடம் முதல் திருநகரி வரை அழைத்துச் செல்லப்படுகிறார்.[3] கருட சேவை அன்று திருநகரி கோயிலின் சுற்றியுள்ள 11 திருநாங்கூர் கோயில்களிலிருந்து, கருட உற்சவர்களை, இக்கோயிலில் எழுந்தருளச் செய்வதுடன், திருமங்கை ஆழ்வாரையும், அவர்தம் இணையரான குமுதவள்ளியையும் அம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்து, திருமங்கை ஆழ்வார் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களைப் பாடுவர்.[4] இக்கோயில் தென்கலை வைணவ வழிபாட்டைப் பின்பற்றுகிறது. வரலாறு மற்றும் இலக்கியத்தில்இக்கோயிலை சோழர்கள் கட்டினார்கள் எனக் கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் இக்கோயில் திருப்பணி மேற்கொண்டனர். குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும்.[5] கட்டிடக்கலைஇரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. கோயில் கோபுரம் ஏழு நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்டது. படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia