தென் கொரியத் திரைப்படத்துறை
தென் கொரியத் திரைப்படத்துறை (Cinema of South Korea) என்பது 1945 ஆம் ஆண்டு முதல் தென் கொரியா நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். கொரியாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு, கொரியப் போர், அரசாங்க தணிக்கை, வணிகத் துறை, உலகமயமாக்கல் மற்றும் தென் கொரியாவின் ஜனநாயகமயமாக்கல் போன்ற நிகழ்வுகள் மற்றும் பிரச்சனைகளால் தென் கொரிய திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.[5] 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென் கொரியத் திரைப்படத்துறையின் பொற்காலம் எனலாம். 1960 களில் வெளியான 'தி ஹவுஸ்மெய்ட்' (1960) மற்றும் 'ஓபல்டன்' (1961) போன்ற திரைப்படங்கள் எல்லா காலங்களிலும் சிறந்த படங்கள் என கருதப்பட்டது. 1990 களின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை 'தி அட்மிரல்: ரோரிங் கரண்ட்ஸ்' (2014) மற்றும் 'எக்ஸ்ட்ரீம் ஜாப்' (2019) போன்ற திரைப்படங்கள் தென் கொரியாவில் அதிக வசூல் செய்த படங்கள் மற்றும் கோல்டன் லயன் விருது வென்ற திரைப்படங்களும் ஆகும். 2012 ஆம் ஆண்டு வெளியான 'பியட்' என்ற திரைப்படம் பாம் டி ஆர் என்ற விருதும் 2019 ஆம் ஆண்டு வெளியான பாரசைட்டு என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான வெளிநாட்டு படத்திற்காக அகாதமி விருது வென்றுள்ளது.[6] தென் கொரியத் திரைப்படத்துறை உலகளாவிய வெற்றி மற்றும் உலகமயமாக்கலுடன் கடந்த இரண்டு தசாப்தங்களாக கொரிய நடிகர்களான லீ பியுங் ஹுன் மற்றும் பே டூனா போன்ற நடிகர்கள் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். கொரிய இயக்குநர்களான பாங் சூன்-ஹோ மற்றும் பார்க் சான்-வூக் போன்றவர்கள் நேரடி ஆங்கில மொழித் திரைப்படத்துறையில் பணியாற்றிய கொரிய அமெரிக்க நடிகர்களான 'ஸ்டீவன் யூன்' மற்றும் 'மா டோங்-சியோக்' போன்றவர்களை கொரியன் மொழித் திரைப்படத்தின் அமெரிக்கா, சீனா மற்றும் பிற சந்தைகளில் மறு ஆக்கம் செய்ய பயன்படுத்தியுள்ளார். பூசன் சர்வதேச திரைப்பட விழா ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான திரைப்பட விழாவாகவும் வளர்ந்துள்ளது. வரலாறு1945-19501945 இல் யப்பான் நாட்டின் விடுதலைக்கு பிறகு 1940 களின் பிற்பகுதியிலும் 1950 களின் முற்பகுதியிலும் தென் கொரிய திரைப்படத்துறை சுதந்திரமான ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறியது.[7] இந்த சகாப்தத்தின் மிக முக்கியமான திரைப்படங்ளின் ஒன்று இயக்குநர் சோய் இன்-கியூ இயக்கிய 'விவா பிரீடம்!' (1946) என்ற படம் ஆகும். இந்த படம் கொரிய சுதந்திர இயக்கத்தை சித்தரித்து உருவாக்கப்பட்டது. இந்த படம் ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது, ஏனெனில் இது நாட்டின் சமீபத்திய விடுதலையைப் பற்றிய கதை களத்தையும் கொண்டுரிந்ததால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாக வரவேட்பை பெற்றிந்தது.[8] இருப்பினும் கொரியப் போரின்போது தென் கொரியத் திரைப்படத்துறை பாதிக்கப்பட்டுள்ளன.[9] 1950 முதல் 1953 வரை 14 படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. 1953ல் நடந்த கொரிய ஆயுத போரை தொடர்ந்து தென் கொரிய அதிபர் சிங்மேன் ரீ என்பவர் திரைப்படத்துறையை ஊக்கிவிக்கும் நோக்கத்துடன் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்து திரைப்படத் துறையை புத்துயிர் பெற முயற்சித்தார். மேலும் தென் கொரிய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அதிகமான திரைப்படங்களைத் தயாரிக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கினார்.[10] 1955-1973 (பொற்காலம்)1950 களில் நடுப் பகுதியில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இன்னும் அரசாங்க தணிக்கைக்கு உட்பட்டிருந்தாலும் தென் கொரியத் திரைப்பதுறையின் ஒரு பொற்காலம் என்று கருதலாம். பெரும்பாலும் உணர்பூர்பமான நாடகத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன.[11] தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை 1954 இல் 15 ஆக இருந்து 1959 இல் 111 ஆக உயர்ந்தது. இந்த சகாப்தத்தின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றான இயக்குநர் லீ கியூ-ஹ்வான் இயக்கிய 'சுன்ஹியாங்-ஜியோன்' (1955) என்ற திரைப்படத்தை சியோலின் மக்கள்தொகையில் 10 சதவீதமானோர் திரையரங்குகளுக்கு சென்று பார்வை இட்டனர். 1956 ஆம் ஆண்டு வெளியான 'மேடம் பிரீடம்' என்ற திரைப்படம் பெண் பாலியல் மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் பற்றிய நவீன கதையைச் சொன்னது.[12] 1961 ஆம் ஆண்டு வெளியான 'தி கோச்மேன்' என்ற திரைப்படம் 1961 பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் வெள்ளி கரடி ஜூரி பரிசை வென்றது. இதுவே சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் தென் கொரியத் திரைப்படம் ஆகும்.[13][14] 1967 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முதல் இயங்குபடமான 'ஹாங் கில்-டோங்' என்ற படம் வெளியானது. அதை தொடர்ந்து தென் கொரியாவின் முதல் அறிவியல் புனைகதை இயங்குபடமான 'கோல்டன் அயர்ன் மேன்' (1968) உட்பட சில இயங்குபடங்கள் தொடர்ந்து வெளியானது. 1973–1979தென் கொரியாவின் திரைப்படத் துறையின் மீதான அரசாங்க கட்டுப்பாடு 1970 களில் ஜனாதிபதி பார்க் சுங்-ஹீயின் சர்வாதிகார "யூசின் சிஸ்டம்" இன் கீழ் வந்தது. கொரிய த் திரைப்படங்கள் விளம்பரக் கழகம் 1973 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, இது தென் கொரிய திரைப்படத்துறையை ஆதரிப்பதற்கும் மற்றும் ஊக்குவிப்பதற்கும் என்று கருதினாலும் அதன் முதன்மை நோக்கம் திரைப்படத் துறையை கட்டுப்படுத்துவதும், தணிக்கை மற்றும் அரசாங்க கொள்கைகளுக்கு "அரசியல் ரீதியாக சரியான" ஆதரவை ஊக்குவிப்பதும் ஆகும்.[15] இந்த சகாப்தத்தில் பார்வையாளர்களிடையே பிரபலமாக இருந்த திரைப்படங்கள் இயக்குநர் கிம் ஹோ-சன் இயக்கிய 'யியோங்-ஜாவின் ஹெய்டேஸ்'(1975) மற்றும் 'வின்டர் வுமன்' (1977) ஆகியவை அடங்கும். இவை இரண்டும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களும் "கவர்ச்சியான திரைப்படங்கள்" என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்த படங்கள் விபச்சாரிகள் மற்றும் பேரம் பேசும் பாலியல் திரைப்படங்கள் ஆகும். இதில் வெளிப்படையான பாலியல் காட்சிகள் இருந்தபோதிலும் அரசாங்கம் இந்த வகை திரைப்படங்களை வெளியிட அனுமதித்தது. மேலும் 1970 மற்றும் 1980 களில் இந்த வகை திரைப்படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. 1980–19961980 களில் தென் கொரிய அரசாங்கம் திரைப்படத்துறை மீதான தணிக்கை மற்றும் திரைப்படத் துறையின் கட்டுப்பாட்டை தளர்த்தத் தொடங்கியது. 1984 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் சட்ட ரீதியாக மற்றும் சுதந்திரமாக தயாரிப்பாளர்கள் திரைப்படங்களைத் தயாரிக்க வழிவகித்தது. மேலும் 1986 ஆம் ஆண்டின் சட்டத்தின் திருத்தம் தென் கொரியாவில் அதிகமான திரைப்படங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தது. 1988 ஆம் ஆண்டில் தென் கொரிய அரசாங்கம் வெளிநாட்டு படங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியது. அமெரிக்க திரைப்பட நிறுவனங்கள் தென் கொரியாவில் அலுவலகங்கள் தொடங்கவும் அனுமதித்தது. சேம்சங் நிறுவும் வெளியிட்ட கிம் யு-சியோக்கின் வெற்றி திரைப்படமான 'மேரேஜ் ஸ்டோரி' மூலம் 1992 இல் தென் கொரிய திரைப்படத் துறை மீண்டும் புதிய பரிமாணத்தை அடைந்தது. இது சேபோல் என அழைக்கப்படும் வணிக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதல் தென் கொரிய திரைப்படம் ஆகும். தற்காலம்1999 ஆம் ஆண்டு இயக்குநர் காங் ஜெ-கியூ இயக்கிய வட கொரியா உளவாளி பற்றிய கதை அம்சம் கொண்ட 'ஷிரி' என்ற திரைப்படம் இவருக்கு முதல் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதுவே தென் கொரியத் திரைப்பட வரலாற்றில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சீட்டுகளை சியோல் நகரில் மட்டும் விற்ற முதல் திரைப்படம் ஆகும். 2000 களில் திரைப்படத் தயாரிப்பாளர் பார்க் சான்-வூக் என்பவரால் தென் கொரிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க சர்வதேச கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. அதன் முதல் கட்டமாக 'ஓல்ட் பாய்' (2003) என்ற திரைப்படம் 2004 கான் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் என்ற விருதை வென்றது மற்றும் குவெண்டின் டேரண்டினோ மற்றும் இசுப்பைக் லீ உள்ளிட்ட அமெரிக்க இயக்குநர்களால் பாராட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இயக்குநர் இசுப்பைக் லீ என்பவரால் 'ஓல்ட் பாய்' என்ற திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டு. அதை தொடர்ந்து பாங் சூன்-ஹோ இயக்கிய 'ஹோஸ்ட்' (2006) என்ற திரைப்படம் ஆங்கில மொழியில் 'ஸ்னோவ்பியர்ஸர்' (2013) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் தென் கொரியாவில் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும் மற்றும் வெளிநாட்டு திரைப்பட விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.[16][17] இயக்குநர் யியோன் சாங்-ஹோ இயக்கிய 'ட்ரெயின் டு பூசன்' (2016) என்ற திரைப்படமும் தென் கொரியாவில் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றானது. 2016 ஆம் ஆண்டில் ஆங்காங்கில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக அமைந்தது.[18] 2019 ஆம் ஆண்டில் வெளியான பாரசைட்டு என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான வெளிநாட்டு படத்திற்காக அகாதமி விருது வென்றுள்ளது.[19] நடிகர்கள்மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia