சிங்களத் திரைப்படத்துறைசிங்களத் திரைப்படத்துறை (Sinhala cinema) என்பது இலங்கைத் திரைப்படத்துறையில் சிங்கள மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இது இலங்கை நாட்டின் முதன்மை திரைப்படத்துறையாகவும் சிங்களவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு துறையாகும் இருக்கின்றது. பல தத்ரூபங்கள் அமையப்பெற்ற சிங்களத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு விருதுகளைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. வரலாறு1925 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட 'ராஜாகீய விக்ரமாயா' என்ற திரைப்படமே முதன் முதலில் தயாரிக்கப்பட்ட சிங்களத் படமாகும். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு எஸ். எம். நாயகம் என்பவரால் தயாரித்து வெளியிடப்பட்ட கடவுனு பொறந்துவ திரைப்படமே முதன் முதலில் இலங்கையில் வெளியிடப்பட்ட முதல் சிங்கள மொழித் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படத்துறை கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1948 ஆம் ஆண்டு 'சிரிசேன விமலவீர' வெளியிட்ட 'அம்மா' என்ற அவரது முதற் திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்படத்துறைக்கும் சிங்களத் திரைப்படத் துறைக்கும் இருந்த ஒற்றுமைகளைக் கலைந்து புதிய திரைப்பட வகையினை வெளிப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் புத்தமதத்தின் கூற்றுக்களுக்கு மதிப்பளித்து சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்களைப் போன்று காதல் கதைகள் அல்லாது பல வகைகளிலும் சிங்களத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் வெளியிட்ட 'ரேகவா' திரைப்படத்தில் காதல் அற்ற பல விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதனையும் அறியலாம். மேலும் இத்திரைப்படம் கான் திரைப்பட விழாக்களில் பங்குகொண்ட முதல் சிங்களத் திரைப்படமென்பதும் குறிப்பிடத்தக்கது.[1] இத்திரைப்ப்டத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கிய 'கம்பெரலிய' டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்ப்ட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதைப் பெற்றது.மேலும் இவரின் படைப்பான 'நிதனய' திரைப்படம் வெனிசில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கன.
மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia