தைட்டானியம் ஈராக்சைடு (Titanium dioxide), தைட்டானியம் (IV) ஆக்சைடு அல்லது தைட்டானியா எனவும் அழைக்கப்படும் தைட்டானியத்தின் ஆக்சைடு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு TiO 2 ஆகும். நிறமியாக பயன்படுத்தப்படும் போது, இச்சேர்மம், தைட்டானியம் வெண்மை, வெண்ணிற நிறமி 6 (பிடபிள்யூ6), அல்லது சிஐ 77891 என அழைக்கப்படுகிறது. பொதுவாக, இச்சேர்மமானது இல்மனைட்டு, ரூடைல் மற்றும் அனாடேஸ் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இச்சேர்மம் வண்ணப்பூச்சு, சூரிய ஒளியிலிருந்து தோலைப் பராமரிக்கும் பூசுபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான நிறப்பொருட்கள் ஆகிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. உணவுக்கான நிறப்பொருளாக பயன்படுத்தும் போது இதற்கான எண் E எண் E171 என தரப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இச்சேர்மத்தின் தயாரிப்பானது 9 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது.[4][5][6] இச்சேர்மமானது அனைத்து நிறமிப்பொருட்களிலும் சேர்த்து மூன்றில் இரண்டு பாகம் பயன்படுத்தப்படுகிறது.[7]
இருப்பு
தைட்டானியம் ஈராக்சைடு இயற்கையில் ரூடைல், அனாடேசு மற்றும் புரூக்கைட்டு ஆகிய கனிமங்களிலும், கூடுதலாக இரண்டு அதிக அழுத்த வடிவங்களான ஒற்றைச்சாய்சதுர பேடிலேயிட் போன்ற வடிவம் மற்றும் செஞ்சாய்சதுர α-PbO2போன்ற வடிவத்திலோ, இரண்டுமே பவேரியாவில் உள்ள விண்கல் வீழ் பள்ளங்களில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று அகாவோகைட்டு என்ற மிக அரிய வகை கனிமம் ஆகும்.[8][9] இச்சேர்மமானது முக்கியமாக இல்மனைட்டு தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இல்மனைட்டே உலகில் டைட்டானியம் ஈராக்சைடினைத் தன்வசம் கொண்டுள்ள மிகவும் பரவிக்கிடக்கிற கனிமூலம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக ரூடைல் டைட்டானியம் ஈராக்சைடை தனது கனிமூலத்தில் 98% அளவிற்குக் கொண்டுள்ள கனிமூலம் ஆகும். அனாடேசு மற்றும் புரூக்கைட்டு ஆகியவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் உள்ள அளவிற்கு 600–800 °C (1,112–1,472 °F) வெப்பப்படுத்துவதன் மூலமும் பெறப்படுகிறது.[10]
↑El Goresy, Ahmed; Chen, Ming; Gillet, Philippe; Dubrovinsky, Leonid; Graup, GüNther; Ahuja, Rajeev (2001). "A natural shock-induced dense polymorph of rutile with α-PbO2 structure in the suevite from the Ries crater in Germany". Earth and Planetary Science Letters192 (4): 485. doi:10.1016/S0012-821X(01)00480-0. Bibcode: 2001E&PSL.192..485E.